Daily Rasi Palan | இன்றைய ராசி பலன் – பிப்ரவரி 15, 2024 – வியாழக்கிழமை
மேஷம்:
இன்று உங்களுக்கு கிடைக்கும் ஒரு புதிய தொடர்பு உங்கள் வாழ்க்கை பாதையை மாற்றக்கூடும். முக்கிய விஷயங்களில் முடிவெடுக்கும் முன் உங்களின் உள்ளுணர்வு சொல்வதை கேளுங்கள். உங்களின் வழிகாட்டி அல்லது நலம் விரும்பிகளிடம் இருந்து ஆலோசனைகளைப் பெறுவது உங்கள் முக்கிய முன்னுரிமையாக இருக்க வேண்டும். கிடைக்கும் புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். சுய பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கவும்.
ரிஷபம்:
காதல் சார்ந்த உங்களின் கோரிக்கை அல்லது ஆசை இன்று நிறைவேற கூடும். உறவில் அமைதி மற்றும் திருப்திகரமான சூழல் நிலவும். வெற்றிக்கான வாய்ப்பு இருப்பதால் நம்பிக்கையுடன் செயல்படுங்கள். நீண்டநாளாக நிலுவையில் இருக்கும் விஷயங்களை முடிக்க முக்கியத்துவம் கொடுங்கள். உங்கள் நிதி நிலை சிறப்பாக இருக்கும்.
மிதுனம்:
புதிய வாய்ப்புகளை ஏற்று கொள்ளுங்கள். உங்கள் இதயம் சொல்வதை பின்பற்றினால் உங்கள் உறவுகளுக்குள் அமைதி ஏற்படும். புதிய விஷயங்களை கற்று கொள்ள சில எதிர்பாராத வாய்ப்புகள் கிடைக்கலாம். உங்கள் முயற்சிகளை தைரியமாக முன்னெடுத்து செல்லுங்கள், ரிஸ்க் எடுக்க தயங்காதீர்கள். இன்று நீங்கள் செய்யும் விடாமுயற்சியும், கடின உழைப்பும் சிறந்த பலனளிக்கும். செலவுகளில் கவனமாக இல்லாவிட்டால் கடன் வாங்க நேரிடும்.
கடகம்:
இன்று உங்களின் உங்கள் காதல் வாழ்க்கையில், நீங்கள் ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டியதாக இருக்கலாம். வெற்றி மற்றும் புதிய வாய்ப்புகள் இன்று உங்களுக்கு கிடைக்கலாம். புதிய தொழில் வாய்ப்பு அல்லது பண வரவு இன்று எதிர்பார்த்தபடி கிடைக்கும். உங்களுக்கு மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தை அளிக்க கூடிய ஆக்கப்பூர்வ விஷயங்களில் ஈடுபாடு காட்ட வேண்டும்.
சிம்மம்:
காதல் உறவை எதிர்பார்த்து காத்திருப்போருக்கு காதலுக்கான புதிய வாய்ப்பு இன்று நெருங்கி வருகிறது. உங்களது வழக்கமான விஷயங்களில் இன்று மாற்றங்கள் இருக்கலாம். அவற்றை அப்படியே ஏற்று கொள்ள வேண்டும். இன்று உங்களுக்கு நிதி ஆதாயத்திற்கான வாய்ப்பு இருக்க கூடும், ஆனால் உங்கள் செலவுகளில் கவனமாக இருங்கள். ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
கன்னி:
உங்கள் மகிழ்ச்சி மற்றும் திருப்தியை அதிகரிக்கும் திறன் கொண்ட ஒரு புதிய நபரால் இன்று நீங்கள் ஈர்க்கப்படலாம். உங்களுடைய தற்போதைய உறவில் வெளிப்படையான தகவல் தொடர்பு மற்றும் நேர்மையை கடைபிடிக்கவும். எதிலும் அவசரமாக முடிவெடுப்பதைத் தவிர்க்கவும். உங்களது வருமானம் இன்று உயரலாம் அல்லது சில புதிய நிதி வாய்ப்புகளை பெறலாம். புதிய முயற்சிகளில் ஈடுபட உங்களுக்கு உத்வேகமும், ஆற்றலும் இருக்கும்.
துலாம்:
உங்கள் காதல் வாழ்க்கை இனிமை மற்றும் சோகம் கலந்த உணர்வுகளின் கலவையாக இருக்கலாம். புதிய காதலுக்கான வாய்ப்பு இருந்தாலும், ஏற்படும் சச்சரவுகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். வியாபாரிகள் தங்கள் தொழிலில் பொறுமை மற்றும் விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும்.உங்கள் நோக்கங்களில் உறுதியாக இருந்தால் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்கலாம். உங்கள் சொந்த திறன்கள் மீது நம்பிக்கை வைக்கவும்.
விருச்சிகம்:
உங்கள் காதல் வாழ்க்கையில் இன்று சில ஏற்ற தாழ்வுகளை சந்திக்கலாம். இன்று நீங்கள் தடைகளை எதிர்கொண்டாலும் உங்கள் பொறுமை மற்றும் நம்பிக்கை உதவியாக இருக்கும். உங்கள் நோக்கங்களில் விடாமுயற்சியுடன் இருங்கள். புதிய பயணங்கள் உங்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கும்.
தனுசு:
உங்கள் துணையுடனான பிணைப்பு இன்று வலுவாகும். உங்கள் இருவருக்குமான நெருக்கத்தை அதிகரிக்க ஒன்றாக நேரம் செலவிட முன்னுரிமை கொடுங்கள். வெளிநபர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். பணியிடத்தில் சக ஊழியர்களின் போட்டி உணர்வை சந்திக்க நேரிடும். சுய பாதுகாப்பு, உடல் மற்றும் உணர்ச்சி தேவைகளுக்கு கவனம் செலுத்துங்கள். உங்களுக்கு இன்று கிடைக்கும் புதிய அனுபவங்கள் தனிப்பட்ட வளர்ச்சிக்கு உதவும்.
மகரம்:
உங்கள் காதல் வாழ்வில் நீடித்து வந்த பிரச்சனைகள் இன்று தீரும். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதிர்பாராத வாய்ப்புகளை பெற கூடும். உங்களின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க செய்யும் வகையிலான உதவிகள் இன்று உங்களுக்கு கிடைக்கலாம். உங்கள் நெருங்கிய நபருடன் மனம் விட்டு பேச இன்று நல்ல நாள். உங்கள் மன ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.
கும்பம்:
உறவுகளில் இருக்கும் பிரச்சனைகள் அல்லது குழப்பங்களை தீர்க்க இன்று நீங்கள் கடினமான முடிவை எடுக்க வேண்டியிருக்கும். உங்களது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உறவுகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இன்று நீங்கள் சற்று நெகிழ்வாக இருக்க வேண்டியிருக்கும். உங்கள் விடாமுயற்சிக்கான நீண்டகால பலனை இன்று பெறுவீர்கள்.
மீனம்:
காதல் உறவுகளில் தவறான புரிதல்கள் அல்லது பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க வெளிப்படையாக தொடர்பு கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படலாம். பணியிடத்தில் நீங்கள் பொறுமை மற்றும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். பின்னடைவுகளை தவிர்க்க ராஜதந்திர அணுகுமுறையை பயன்படுத்துங்கள். புதிய முதலீடுகளை செய்ய ஏற்ற நாள்.