உயிரிழந்த வெற்றி துரைசாமி பெயரில் நினைவு விருது : வெற்றிமாறன்..!
இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற இடத்தில் கார் விபத்தில் உயிரிழந்தார் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி. இந்நிலையில், தொழில் அதிபர், வனவிலங்கு புகைப்பட கலைஞர் மற்றும் இயக்குனராக வலம் வந்த வெற்றிக்கு நேற்று இரங்கல் நிகழ்வு நடந்தது.
அதில் கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறன் மனம் உருகி பேசியுள்ளார். மனிதர்களிடம் மட்டுமல்லாது விலங்குகளிடமும் அன்போடு நடந்து கொள்பவர் வெற்றி. அவருடைய இறப்பை ஏற்றுக்கொள்ள மனம் மறுகிறது. மேலும் IIFC சார்பில் முதல் படம் எடுக்கும் இயக்குனர்களுக்கு வைல்ட் போட்டோகிராபருக்கும் வெற்றியின் நினைவாக விருது வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். IIFC என்பது வளரும் திரைப்பட தயாரிப்பு பயிற்சி வழங்கும் நிறுவனமாகும். இதில் தலைமை செயலராக வெற்றிமாறனும், துணை செயலாளராக வெற்றி துரைசாமியும் பணியாற்றி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.