பிரதமர் மோடியை பாராட்டி கடிதம் எழுதிய நடிகை..!
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி குந்த்ரா, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ராமர் கோவில் கட்டுவதன் மூலம் கோடிக்கணக்கான மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதில் பிரதமர் மோடியின் பங்களிப்பை வாழ்த்தி பாராட்டினார்.
கடிதத்தன் தலைப்பில், ”அயோத்தி தாமில் ஸ்ரீ ராமர் கோவில் கட்டும் லட்சக்கணக்கான மக்களின் கனவை நிறைவேற்றியதற்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்” என்று ஷில்பா ஷெட்டி குறிப்பிட்டுள்ளார்.
இந்தியில் எழுதப்பட்ட அந்த கடிதத்தில் மேலும், “சிலர் வரலாற்றைப் படிக்கும்போது, மற்றவர்கள் அதிலிருந்து கற்றுக்கொண்டாலும், உங்களைப் போன்றவர்கள் (பிரதமர் நரேந்திர மோடி) அதை மீண்டும் உருவாக்கும் அசாதாரண திறனைக் கொண்டுள்ளனர். ராம ஜென்மபூமியின் 500 ஆண்டுகால வரலாற்றை மாற்றி எழுதியிருக்கிறீர்கள்.
இதற்கு மனமார்ந்த நன்றிகள். இந்த மங்களகரமான சாதனையை அடைந்ததற்காக உங்கள் பெயர் ஸ்ரீ ராமருடன் என்றென்றும் நினைவுகூரப்படும்.” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக, 2024 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.