நர்சரி பள்ளியில் மாணவர்களுக்கு ஒரு மணி நேரம் மட்டுமே வகுப்பு..!
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளையும் நடத்த வேண்டும் என்கிற நோக்கில் பஞ்சாப் அரசு தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, பஞ்சாப் மாநிலத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டில் இருந்து நர்சரி வகுப்புகளை துவங்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, மூன்று வயது பூர்த்தி அடைந்த குழந்தைகள் நர்சரி வகுப்பில் சேரலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 3 முதல் 4 வயது இருக்கும் குழந்தைகள் நர்சரி பள்ளியிலும், 4 முதல் 5 வயது இருக்கும் குழந்தைகள் எல்கேஜி வகுப்பிலும், 5 முதல் 6 வயது இருக்கும் குழந்தைகள் யுகேஜி வகுப்பிலும் சேர வேண்டும் என அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
மேலும், ஆறு வயது பூர்த்தியான மாணவர்கள் மட்டுமே ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1, 2024ஆம் தேதி நிலவரப்படி குழந்தையின் வயது கணக்கு செய்யப்பட்டு நர்சரி வகுப்பிற்கான சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நர்சரி பள்ளியில் மாணவர்களுக்கு ஒரு மணி நேரம் மட்டுமே வகுப்பு நடைபெறும் எனவும், தனி பாடத்திட்டம் இருக்கும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.