அமிர்தாவுக்கு ஷாக் கொடுத்த கணேஷ்… உண்மையை உடைத்த பாக்யா : இனி என்ன நடக்குமோ!
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், தினசரி எபிசோடுகள் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
செழியன் பிரச்சனையில் என்ன செய்வது என்று குடும்பத்தினர் தவித்துக்கொண்டுடிருக்கும் நிலையில், அமிர்தாவின் முதல் கணவன் கணெஷ் அமிர்தாவை தேடி வருவதால், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் பாக்யா, குடும்பத்தினரிடமும் இதை எப்படி சொல்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கிறார்.
இதனிடையே கணேஷ் கொடுத்த கெடு முடிந்துவிட்டதால், அவன் அமிர்தாவை தேடி பாக்யா வீட்டுக்கு வர, பாக்யா அவன் வருவதற்கு முன், அமிர்தா – எழில் இருவரையும் கோவிலுக்கு அனுப்பி வைத்துவிடுகிறார். அப்போது பாக்யா பயத்தில் பதட்டமாக இருப்பதை தெரிந்துகொண்ட ராமமூர்த்தி என்ன ஆச்சு பாக்யா என்று கேட்க, பெரிய பிரச்சனை மாமா எல்லோரும் வரட்டும் சொல்கிறேன் என்று சொல்கிறாள்.
இதனிடையே எழில் – அமிர்தா கிளம்புவதை பார்த்த கணேஷ், நான் வருவதற்கு முன் அனுப்பி வச்சிட்டீங்களா? என்ன நடந்தாலும் சரி இன்னைக்கு நான் அமிர்தாவை சந்திக்காமல் விட மாட்டேன் என்று மனதில் நினைத்துக்கொண்டு அவர்களின் பின்னாடியே செல்கிறான். இந்த பக்கம் பாக்யா வீட்டில் உள்ள அனைவரிடமும் உண்மையை சொல்ல தயாராகிறார்.
என்ன பெரிய பிரச்சனை, ஏற்கனவே செழியன் பிரச்சனை ஒரு பக்கம் தீராம இருக்கு, இப்போ நீ அதை பத்தி தான் பேச போறீயா என்று கேட்க, அதன்பிறகு பாக்யா நடந்த அத்தனை விஷயத்தையும் சொல்லிவிடுகிறாள். பாக்யாவின் பேச்சை கேட்டு ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்த நிலையில், ராமமூர்த்திக்கு பார்கில் ஒரு ஆள் நிலாவுடன் விளையாடியது அப்போது தான் தெரியவருகிறது. அதை பற்றி பாக்யாவிடமும் சொல்கிறார்.
இதை கேட்டு, கோபி, அன்னைக்கு நம்ம வீட்டு முன்னாடி ஒரு பையன் வந்து நின்னானே நீ கூட எழில் ப்ரண்டுனு சொன்னியே அவனா என்று கேட்க, பாக்யாவும், ஆமாம் என்று சொல்ல, ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியில் ஆழ்கிறது. அப்போது செழியன் அவனுக்கு என்ன வேண்டுமாம் என்று கேட்க, அவனுக்கு அமிர்தாவுடன் வாழ வேண்டுமாம் என்று சொல்கிறாள். இதனிடையே எழில் – அமிர்தா இருவரையும் ஃபாலோ பண்ணி கணேஷ் கோவிலுக்கே சென்றுவிடுகிறான்.
அப்போது அமிர்தா தனியாக இருக்கும்போது அவள் முன் போய் அமிர்தா என்று சொல்ல, கணேஷை பார்த்த அமிர்தா அதிர்ச்சியாகிறார் அத்துடன இன்றைய எபிசோடு முடிவடைகிறது.