பாஜக தேசிய தலைவர் நாற்காலியில் அடுத்து அமரப் போவது யார்?
ஏப்ரல் 2ஆம் தேதி 13 மாநிலங்களை சேர்ந்த 50 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிவுக்கு வருகிறது. ஏப்ரல் 3ஆம் தேதி 2 மாநிலங்களை சேர்ந்த 6 உறுப்பினர்கள் ஓய்வு பெறுகின்றனர். இதையொட்டி வரும் 27ஆம் தேதி தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. வேட்புமனு தாக்கல் இன்றுடன் (பிப்ரவரி 15) நிறைவு பெறுகிறது. அரசியல் கட்சிகள் யாரை களமிறக்கலாம் என்று முடிவு செய்து வருகின்றன.
இந்நிலையில் பாஜக தங்களின் அடுத்தகட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி,
குஜராத் மாநிலம்
ஜே.பி.நட்டா
கோவிந்த்பாய் துலோகியா
மாயங்க்பாய் நாயக்
ஜஸ்வந்த்சின் சலம்சின் பார்மர்
மகாராஷ்டிர மாநிலம்
அசோக் சவான்
மேதா குல்கர்னி
அஜித் கோப்சட்டே
பாஜக தேசிய தலைவராக இருக்கும் ஜே.பி.நட்டாவிற்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பை செலுத்தும் வகையில் மாநிலங்களவை எம்.பி பதவி அளிக்கப்படுகிறது. இதன்மூலம் பாஜக தேசிய தலைவர் நாற்காலியில் அமரப் போகும் புதிய நபர் யார்? இந்த சூழலில் மீண்டும் அமித் ஷாவிற்கு வாய்ப்பளிக்கப்படுமா? இல்லை மூத்த தலைவர்கள் யாருக்காவது வாய்ப்பு வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுகிறது.