யுவன் – எஸ்.ஜே.சூர்யா கூட்டணி : டான்ஸ் ஜோடி டான்ஸ் வீடியோ வைரல்
இதுவரை நீ யாரோ.. இனி நீதான் ஹீரோ.. இணையத்தில் பட்டைய கிளப்பும் ஜீ தமிழின் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 2 வீடியோவை, யுவன் சங்கர் ராஜா, எஸ் ஜே சூர்யா இணைந்து வெளியிட்டுள்ளனர்.
தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வரும் ஜீ தமிழ் சேனலில் பல சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகின்றனர். இதில் பல நிகழ்ச்சிகளுக்கு மக்கள் மத்தியில் தனி வரவேற்பு கிடைத்து வருகிறது.
அந்த வகையில், கடந்த வாரம் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் நடைபெற்று முடிந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்திருந்த நிலையில், இந்த வாரம் முதல் மக்களின் மனம் கவர்ந்த நடன நிகழ்ச்சியான டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது.
Happy to release the Official Song of Dance Jodi Dance Reloaded 2🕺💃
Let’s Vibe to the Rhythm of DJD🥁
Best wishes to @ZeeTamil and all the Contestants 😊https://t.co/2K5xCZjU8L@vbrcomposer @VishnuEdavan1 @Jeevan_offl #DanceJodiDanceReloaded2 #OfficialSong #ZeeTamil
— Raja yuvan (@thisisysr) December 22, 2023
பல வகையான ஆடிஷன் மூலம் மொத்தம் 24 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மெகா ஆடிஷன் மூலம் இவர்களில் இருந்து 12 போட்டியாளர்கள் அடுத்த கட்டத்திற்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். ஏற்கனவே நிகழ்ச்சி குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வரும் இருகிறது.
Music × Dance 🎶
Dance Jodi Dance Reloaded 2 originals is here 🕺🏻💃🏻
The track made for your dancing shoes!Best wishes to @ZeeTamil and All the Contestants!https://t.co/Mv81xkjhBP@vbrcomposer @VishnuEdavan1 @Jeevan_offl_#DanceJodiDanceReloaded2 #OfficialSong #ZeeTamil
— S J Suryah (@iam_SJSuryah) December 22, 2023
இதனிடையே தற்போது இந்த நிகழ்ச்சியின் பாடல் வீடியோவை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் இயக்குனரும் நடிகருமான எஸ் ஜே சூர்யா ஆகியோர் வெளியிட்டுள்ளனர். இதுவரை நீ யாரோ இனி நீதான் ஹீரோ என தொடங்கும் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.