திருடுபோகும் காலணிகள்… பூட்டு போட்டுவிட்டு வழிபட செல்லும் திருப்பதி பக்தர்கள்!
திருப்பதி மலையில் உள்ள நான்கு மாட வீதிகளில் காலணிகளை அணிந்து நடமாட தடை அமலில் உள்ளது. மேலும் பக்தர்களின் வசதிக்காக திருப்பதி மலையில் உள்ள பல்வேறு பகுதிகளில் இலவச காலணி பாதுகாப்பு மையங்கள் உள்ளன.
சாமி தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் அவற்றில் தங்களுடைய செருப்புகள் உள்ளிட்ட காலணிகளை பத்திரப்படுத்திவிட்டு கோவிலுக்கு சென்று ஏழுமலையானை வழிபட்டு திரும்பி வந்தபின் எடுத்து செல்வது வழக்கம்.
தேவஸ்தானத்தின் இலவச காலணி காப்பகங்களில் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. எனவே சரியான கண்காணிப்பு இல்லாத காரணத்தால் பக்தர்கள் விட்டு செல்லும் விலை உயர்ந்த காலணிகளை குறிவைத்து சிலர் திருடி செல்வதாக கூறப்படுகிறது.
இதனால் அனுபவப்பட்ட பக்தர்கள் திருப்பதி மலையில் நான்கு மாட வீதிகள் அருகே உள்ள காலனி காப்பகத்தில் தங்கள் காலணிகளை வைத்து அவற்றிற்கு பூட்டு போட்டு பூட்டிவிட்டு சாமி கும்பிட சென்று இருக்கின்றனர்.
தேவஸ்தானத்தை பார்த்து அட இதுக்கு கூடவா பாதுகாப்பு கொடுக்க முடியாது இவ்வளவு பெரிய நிர்வாகத்தால் என்ற கேள்வி இதனால் ஏற்பட்டுள்ளது.