பிரம்மாண்டமாக நடைபெற உள்ள ஆனந்த் அம்பானியின் திருமணம்.. இத்தனை சிறப்பு ஏற்பாடுகளா?
முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்டிற்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திருமணத்திற்கு வரும் விருந்தினர்களுக்கு மெழுகுவர்த்தியை பரிசளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மெழுகுவர்த்திகளை மகாபலேஸ்வரில் உள்ள பார்வை மாற்றுத்திறனாளி கைவினைக் கலைஞர்கள் தயாரிக்கின்றனர். இந்தியாவின் பாரம்பரிய கலைகளையும், கைவினை கலைஞர்களையும் சிறப்பிக்கும் விதமாக இது அமைந்துள்ளது. இந்த திருமணத்தின்போது “ஸ்வதேஷ்” (ஸ்வதேஷ் என்பது ரிலையன்ஸ் குழுமத்தால் உருவாக்கப்பட்ட பாரம்பரிய கலைகளுக்கான அமைப்பாகும்) ஒளிர்வது மட்டுமல்லாமல் அதில் அங்கம் வகிக்கும் கலைகளையும் உயர்த்தும் விதமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதில் கைத்தறி, ஆடை அலங்கார பொருட்கள், கைவினை பொருட்கள், அணிகலன்கள் உள்ளிட்ட பல்வேறு கலைஞர்கள் மற்றும் கலைகளும் அங்கம் வகிக்கின்றன. குறிப்பாக பார்வை மாற்று திறனாளி கைவினைக் கலைஞர்களும் உள்ளனர். ஸ்வதேஷ் இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் பண்டைய கால கலைகளை பிரதிபளிக்கிறது. இது பாரம்பரிய கலைகளை காப்பது மட்டுமன்றி இந்தியாவின் பண்டைய கலைகளின் முக்கியத்துவம் குறித்து பறைசாற்றுகிறது. “மேக் இன் இந்தியா” திட்டத்தின் கீழ் ஸ்வதேஷ் திறமையான கைவினை கலைஞர்களுக்கு ஆதரவு அளிக்கிறது.
அனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன் திருமணம் மார்ச் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் கிரீன்ஸில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.