Manju Warrier: Footage போஸ்டரில் ஜொள்ளுவிட வைத்த மஞ்சு வாரியர்… ஓவர் டோஸ்ஸில் கிறங்கிய ரசிகர்கள்!
மலையாள லேடி சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியரின் லேட்டஸ்ட் போஸ்டர் ஒன்று ரசிகர்களை கலங்கடித்து வருகிறது. ரஜினியுடன் வேட்டையன் படத்தில் நடித்து வரும் மஞ்சு வாரியர், மலையாளம், இந்தி மொழிகளிலும் பிஸியாகவே வலம் வருகிறார். இந்நிலையில் மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் ஃபுட்டேஜ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.
கலங்கடிக்கும் மஞ்சு வாரியரின் ஃபுட்டேஜ் போஸ்டர்
மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் மஞ்சு வாரியர். நடிகையாக மட்டும் இல்லாமல் பாடகியாகவும் சில பாடல்களை பாடியுள்ளார். தமிழில் தனுஷுக்கு ஜோடியாக அசுரன், அஜித்துடன் துணிவு படங்களில் நடித்துள்ளார். 45 வயதான மஞ்சு வாரியர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் துணிவு ஷூட்டிங்கின் போது அஜித்துடன் பைக் டூர் சென்றும் மாஸ் காட்டினார்.
மஞ்சு வாரியர் தற்போது தமிழ், மலையாளம், இந்தி என மூன்று மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். தசெ ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. ரஜினி, அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா, ரித்திகா சிங், துஷாரா விஜயன் ஆகியோருடன் மஞ்சு வாரியரும் லீடிங் ரோலில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் மலையாளத்தில் மோகன்லாலுடன் லூசிபர் 2ம் பாகம், ஃபுட்டேஜ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ஃபுட்டேட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. எடிட்டர் சைஜூ ஸ்ரீதரன் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ஃபுட்டேஜ். மாயநதி, கும்பலாங்கி நைட்ஸ் போன்ற படங்களின் எடிட்டர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஃபுட்டேஜ் படத்தில் மஞ்சு வாரியர், விஷாக் நாயர், காயத்ரி அசோக் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் மஞ்சு வாரியரின் போஸ் ரசிகர்களை திகைக்க வைத்துள்ளது. இதில் விஷாக் நாயருடன் ரொம்பவே நெருக்கமாக போஸ் கொடுத்துள்ளார் மஞ்சு வாரியர். ஹீரோவின் மடியில் ஏறி அமர்ந்துள்ள மஞ்சு வாரியர், அவரை தனது மார்போடு அணைத்துக்கொள்ளும் படி போஸ் கொடுத்துள்ளார். Erotic ஸ்டைலில் உருவாகியுள்ள இந்த போஸ்டர் மஞ்சு வாரியர் ரசிகர்களை மிரள வைத்துள்ளது.
மஞ்சு வாரியரிடம் இருந்து இப்படியொரு போஸ்டரை எதிர்பார்க்கவில்லை என அவர்கள் கமெண்ட்ஸ் செய்துள்ளனர். இந்த போஸ்டரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள மஞ்சு வாரியர், “ஒவ்வொரு கதவுக்கும் பின்னால் உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்ட உலகம் உள்ளது” என கேப்ஷன் கொடுத்துள்ளார். இதன்மூலம் இந்தப் படத்தில் மஞ்சு வாரியரின் கவர்ச்சி விருந்து கன்ஃபார்ம் என ரிலீஸுக்காக ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர்.