Dhanush – தனுஷ் பிஸியோ பிஸி.. அடுத்து அந்த இளம் இயக்குநருடன் இணைகிறாரா?.. வேற மாதிரி இருக்குமே

சென்னை: நடிகர் தனுஷ் இந்திய அளவில் ஃபேமஸான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. தற்போது சேகர் கம்முல்லா இயக்கும் படத்தில் நடித்துவரும் அவர்; தனது 50ஆவது படத்தை இயக்கி நடிக்கவும் செய்திருக்கிறார். மேலும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கவிருக்கிறார் அவர்.

கஸ்தூரி ராஜாவின் மகனான தனுஷ் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அந்தப் படம் தோல்வியை சந்தித்தது. அதிலும் தனுஷின் உருவம் ரொம்பவே கிண்டல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து காதல் கொண்டேன் படத்தில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தியதன் காரணமாக நல்ல நடிகர் என்ற பெயரை பெற்றார். காதல் கொண்டேன் படத்தைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் இதுவரை 49 படங்களில் நடித்திருக்கிறார். பெரும்பாலான படங்கள் ஹிட் படங்களாகவும், தனுஷுக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்த படங்களாகவும் அமைந்தன.

பிஸி தனுஷ்: தனுஷின் நடிப்பில் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது.தனுஷ் அடுத்ததாக மாரி செல்வராஜுடன் ஒரு படம், சேகர் கம்முல்லாவுடன் ஒரு படம், வடசென்னை 2 உள்ளிட்ட படங்களில் நடிக்கவிருக்கிறார். இதனால் அவர் படு பிஸியாக இருக்கிறார். முக்கியமாக முதல் படத்தில் பல கிண்டலுக்கு ஆளான தனுஷ்; தன்னை கிண்டல் செய்தவர்களையே பாராட்ட வைத்ததன் மூலம் உண்மையான வெற்றி என்றால் என்னவென்று நிரூபித்திருக்கிறார்.

தனுஷ் 50: இதற்கிடையேநடிகராக மட்டுமின்றி பாடலாசிரியர், பாடகர், இயக்குநர் என்ற பன்முகத்தன்மையை கொண்ட தனுஷ் பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் நல்ல வரவேற்பையே பெற்றது. தற்போது அவர் தனது 50ஆவது படத்தை தானே இயக்கிவருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தின் ஷூட்டிங் முடிந்துவிடது. படமானது வடசென்னையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பதும் எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்: இப்படி நடிப்பில் படு பிஸியாக இருக்கும் தனுஷ் தனது 50ஆவது படம் மட்டுமின்றி இன்னொரு படத்தையும் இயக்குகிறார். அந்தப் படத்துக்கு நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் ஹீரோவாக தனுஷின் உறவினர் வருண் என்பவரும், ஹீரோயினாக அனிகாவும் நடிக்கின்றனர். காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று இப்படத்திலிருந்து போஸ்டர் ஒன்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இளம் இயக்குநருடன் தனுஷ்: இந்நிலையில் தனுஷ் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி குட் நைட் படத்தை இயக்கிய விநாயக் சந்திரசேகருடன் தனுஷ் இணையவிருப்பதாக கூறப்படுகிறது. குட் நைட் படத்தை பார்த்து ரொம்பவே ஈர்க்கப்பட்ட தனுஷ், விநாயக் சந்திரசேகரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, குட் நைட் படம் பற்றி நீண்ட நேரம் பேசியதாகவும்; அப்போது தனக்கு ஒரு கதை தயார் செய்யும்படி சொன்னதாகவும் தகவல் கசிந்துள்ளது. இதனையடுத்து மகிழ்ச்சியான விநாயக் தனுஷுக்காக கதை தயார் செய்யும் பணியில் இறங்கிவிட்டாராம். இவர்கள் இருவரும் இணையும் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *