போலீஸ் அவதாரம் எடுத்த கியா கேரன்ஸ் கார்! இனி திருடர்களை ஈஸியா துரத்தியே புடிச்சிடுவாங்க!
பஞ்சாப் போலீசார் கியா நிறுவனத்தின் கேரன்ஸ் காரை போலீஸ் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு கஸ்டமைஸ் செய்து பல்வேறு அம்சங்களை உட்பகுத்தி அதன் லுக்கையே மாற்றி போலீஸ் பயன்பாட்டிற்காக 71 கார்களை வாங்கியுள்ளது. இது சாதாரண கியா கேரன்ஸ் காரில் இருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு லுக் மற்றும் அம்சங்கள் நிறைந்ததாக இதை உருவாக்கியுள்ளது. இந்த கார் குறித்த விரிவான விவரங்களை தான் காண போகிறோம்.
கியா நிறுவனம் சமீபத்தில் பஞ்சாப் போலீசாக கியா கேரன்ஸ் என்ற எம்பிவி காரை சிறப்பாக கஸ்டமைஸ் செய்து 71 கார்களை டெலிவரி செய்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லியில் நடந்த பாரத் மொபிலிட்டி குளோபல் கண்காட்சியில் தனது பர்பஸ் பில்டு வாகனங்களை காட்சிப்படுத்தியிருந்தது. இந்த வாகனங்கள் எல்லாம் பொதுமக்களுக்கு அவசரகாலம் ஏற்படும் போது அவர்களுக்கு உடனடியாக உதவி செய்வதற்காக பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த காரை தற்போது பஞ்சாப் போலீசார், போலீஸ் காரின் பயன்பாட்டிற்காக வாங்கியுள்ளனர். கியா நிறுவனத்தின் இந்த கார் நிச்சயம் பஞ்சாப் போலீசாரின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அவர்களுக்கு தேவையான அனைத்து அம்சங்களும் கொண்டவாறு இருக்கும் என தெரிவித்துள்ளது. இதன் மூலம் பஞ்சாப் போலீசார் சாதாரண காரில் இருந்து இந்த காரில் ஏகப்பட்ட விஷயங்களை சுலபமாக செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்த கியா கேரன்ஸ் காரை பஞ்சாப் போலீசார் வாங்கிய நிலையில் அதன் இன்ஜின் விபரங்கள் குறித்த தகவல் நமக்கு கிடைத்துள்ளது. இதன்படி இந்த கார்களில் 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
இது ஒரு பர்பஸ் பில்டு வாகனம் என்பதால் இதில் ஏகப்பட்ட கஸ்டமைசேஷன் ஆப்ஷன்கள் உள்ளன. முக்கியமாக அதிக இன்டென்சிட்டி கொண்ட ஸ்ட்ரோப் லைட்டுகள் வழங்கப்பட்டுள்ளது, மேலும் இதில் பொதுமக்களுக்கு அறிவிப்பு தரும் வகையில் மைக் மற்றும் ஸ்பீக்கர் செட்டப் உடன் வழங்கப்பட்டுள்ளது.
இப்படியாக காரில் பொருத்தப்பட்டுள்ள கூடுதல் எலெக்ட்ரானிக் அம்சங்களை இயக்குவதற்காக காரில் கூடுதலாக 60 ஆம்ஸ் கொண்ட பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் காரின் வெளிப்புறத்தில் அவசர உதவிக்கு 112 என்ற எண்ணை அழைக்க வேண்டும் என ஸ்டிக்கர் ஓட்டப்பட்டுள்ளது. இந்த காரில் கனெக்டெட் அம்சங்கள் உள்ளன. இதுபோக பெரிய வீல் பேஸூம் உள்ளது.
இப்படியாக காரில் பொருத்தப்பட்டுள்ள கூடுதல் எலெக்ட்ரானிக் அம்சங்களை இயக்குவதற்காக காரில் கூடுதலாக 60 ஆம்ஸ் கொண்ட பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் காரின் வெளிப்புறத்தில் அவசர உதவிக்கு 112 என்ற எண்ணை அழைக்க வேண்டும் என ஸ்டிக்கர் ஓட்டப்பட்டுள்ளது. இந்த காரில் கனெக்டெட் அம்சங்கள் உள்ளன. இதுபோக பெரிய வீல் பேஸூம் உள்ளது.
முக்கியமாக இந்த காரில் மூன்றாவது வரிசை சீட் பெரிதாக போலீசார் வசதிக்காக வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் குறித்து கியா இந்தியா நிறுவனத்தின் தலைமை விற்பனை மற்றும் தொழில் அதிகாரி முவாங்சிக் கூறும் போது : ‘ பர்பஸ் பில்டு வாகனம் என்பது எதிர்கால மொபிலிடிக்கு மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. இதில் உள்ள கஸ்டமைசேஷன் ஆப்ஷன் அதை பயன்படுத்துபவர்களுக்கு மிகவும் உபயோகம் உள்ளதாக இருக்கிறது.
கியா நிறுவனம் பஞ்சாப் போலீசாருக்கு இந்த வாகனத்தை விற்பனை செய்வதில் பெருமிதம் கொள்கிறோம். கியா கேரன்ஸ் பர்பஸ்-பில்டு வாகனத்தை பொறுத்தவரை சிறப்பான வாகனமாகவும் பாதுகாப்பான டிரைவிங் அனுபவத்தை தரும் வாகனமாகவும், நீண்ட தூரம் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் பயணிக்கும் வகையிலான வாகனங்களாகவும், இதை உருவாக்கியுள்ளோம். இதன் உட்புறம் அதிக இட வசதியுடன் இதன் சீட்டிங் எல்லாம் சொகுசாகவும் அதே நேரம் தலையை சாய்த்து கொள்ள ஹெட் ரெஸ்ட் வசதியுடனும் வழங்கியுள்ளோம்.
தற்போது பஞ்சாப் போலீசார் உடன் இணைந்து இதை பஞ்சாப் போலீஸ் பயன்பாட்டிற்காக நாங்கள் வழங்கியது போல மற்ற மாநிலங்களுக்கும் ஒவ்வொரு போலீசாரிடமும் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இந்த வாகனங்கள் எல்லாம் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும் என எதிர்பார்க்கிறோம். பலருக்கு இந்த 7 சீட்டர் கார் என்பது மிக பெரிய அளவில் உதவியாக இருக்கும்.” என கூறினார்
இந்த காரில் 60: 40 என்ற அளவில் இரண்டாவது வரிசை சீட்டும், 50:50 என்ற மூன்றாவது வரிசையில் சீட்டும் இருக்கிறது. மூன்றாவது வரிசை சீட் ஸ்பிலிட் சீட்டில் அட்ஜஸ்டபிள் செய்யக்கூடிய ஹெட் ரெஸ்ட்கள் உள்ளன. மேலும் இந்த காரில் 12 வோல்ட் பவர் சாக்கெட்டுகளும் ஐந்து டைப் சி யுஎஸ்பி சார்ஜிங் போர்டுகளும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த காரில் அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. அது ஏபிஎஸ் அம்சத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.