இதுமட்டும் சேல்ஸ்க்கு வந்துச்சு ஒட்டுமொத்த மார்க்கெட்டும் காலியாகிரும்! ஆக்டிவா, என்டார்க்கைகூட ஓரங்கட்டுமா!!

தாய்வானைச் சேர்ந்த உலக புகழ்பெற்ற மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனம் கோகோரோ (Gogoro). இந்த நிறுவனம் சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தில் புதிய பேட்டரி ஸ்வாப்பிங் ஈகோ சிஸ்டம் மற்றும் அத்துடன் இந்தியாவில் வைத்து தயாரிக்கப்பட்ட கிராஸோவர் ஸ்மார்ட் ஸ்கூட்டர் எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியீடு செய்தது.

இந்த ஸ்கூட்டரைத் தொடர்ந்து மற்றும் ஒரு உலக தரம் வாய்ந்த தயாரிப்பையும் கோகோரோ இந்தியாவில் அறிமுகம் செய்ய தயாராகிக் கொண்டிருப்பதாகவே தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. அது மிகவும் பவர்ஃபுல் எலெக்ட்ரிக் டூ-வீலராக (Powerful Electric Two-Wheeler) இருக்கும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.

நிறுவனம் புதிதாக பல்ஸ் (Pulse) எனும் முற்றிலும் புதிய தோற்றத்திலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இது உயர் செயல் திறனை வெளிப்படுத்தக் கூடிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக மட்டுமே இருக்கப்போவதில்லை, அதிக பிரீமியம் அம்சங்களைத் தாங்கியதாகவும் அது இருக்கும் என கூறப்படுகின்றது.

மிக முக்கியமாக இதன் எல்இடி லைட் மிகவும் தனித்துவமானதாகக் காட்சியளிக்கின்றது. முகப்பு பகுதியில் பயன்படுத்தப்பட்டு இருப்பது மேட்ரிக்ஸ் வகை எல்இடி லைட் ஆகும். இந்த யூனிட்டில் மொத்தமாக 13 எல்இடி லைட்டுகள் வழங்கப்பட்டு இருக்கும். இவை அனைத்தும் ஆட்டோ அட்ஜெஸ்ட் வசதிக் கொண்டவை ஆகும்.

மேலும், வாகனத்தின் வேகத்திற்கு அதிக வெளிச்சத்தை அவை வழங்கும் திறனையும் கொண்டிருக்கின்றன. இது ரைடருக்கு மிக சிறந்த பார்வை திறனை பெற உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுதவிர, கார்களில் வழங்கப்படுவதைப் போன்ற கார்னரிங் லைட்டுகளும் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்படும் என கோகோரோ தெரிவித்து இருக்கின்றது.

இந்த அம்சங்களே இருசக்கர வாகன ஓட்டிகளின் கவனத்தைப் பெருமளவில் ஈர்த்திருக்கின்றது. இதை வைத்தே பல்ஸ் விற்பனைக்கு வரும்பட்சத்தில் மிகப் புரட்சியை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பல்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இந்த அம்சங்கள் மட்டுமில்லைங்க இன்னும் பற்பல நவீன மற்றும் சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

அந்தவகையில், 10.25 அங்குலம் கொண்ட பெரிய தொடுதிரை வசதிக் கொண்ட டிஸ்பிளே வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த திரை ஸ்நேப் டிராகன் க்யூடபிள்யூஎம் 2290 புராசஸ்ஸர் தொழில்நுட்பம் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், குட்டி லேப்டாப் அல்லது ஸ்மார்ட் போனை போல இதை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த திரை திருப்பத்திற்கு திருப்பம் வழித் தடம் பற்றிய தகவலை வழங்கும் திறன் கொண்டதே இந்த திரை ஆகும். இதுதவிர, ரைடிங் விபரங்கள் அறியும் வசதி, ப்ளூடூத் இணைப்பு போன்றவையும் பல்ஸில் வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் மிக சிறந்த இயக்கத்திற்காக ஏர்-கூல்டு ஹைப்பர் டிரைவ் எச்1 வகை மோட்டாரே வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதனால் 9 kW பவரை வெளியேற்ற முடியும். இதனால் வெறும் 3 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 50 கிமீ வேகத்தை எட்டிவிட முடியும். இதுவரை எந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் வழங்கப்படாத வகையில் ஒட்டுமொத்தமாக ஆறு விதமான ரைடிங் மோட்கள் பல்ஸில் வழங்கப்பட இருப்பதாக கோகோரோ தெரிவித்து இருக்கின்றது.

சிட்டி (City), டூரிங் (Touring), டிராக் (Track), ரேஞ்ஜ் (Range), டர்ட் (Dirt) மற்றும் கஸ்டம் (Custom) ஆகியவையே அவை ஆகும். கஸ்டம் நம்முடைய தேவைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும் ஆப்ஷனே இதுவாகும். இத்துடன், டிராக்சன் கன்ட்ரோல் சிஸ்டமும் பல்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இத்தகைய அம்சங்கள் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான பல்ஸையே தற்போது இந்தியாவில் வெளியீடு செய்திருக்கின்றது கோகோரோ. இதனை இந்த ஆண்டிற்குள்ளேயே விற்பனைக்கு அறிமுகம் செய்யவும் அது திட்டமிட்டு இருக்கின்றது. ஆனால், துள்ளியமான நாள் பற்றிய விபரம் வெளியாகவில்லை. இருப்பினும், இதன் வருகை எதிர்நோக்கி இப்போதே இந்திய இரண்டு சக்கர வாகன காதலர்கள் பலர் காத்திருக்க தொடங்கிவிட்டனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *