ராயல் என்பீல்டு பைக் உரிமையாளர்களின் வாலை ஒட்ட நறுக்கிய போலீஸ்… ஒவ்வொரு ஊரா குறி வைக்கறாங்க!

இந்தியாவில் பைக் வைத்திருப்பவர்கள் மத்தியில் மோசமான பழக்கம் ஒன்று உள்ளது. சைலென்சர்களை (Silencers) மாடிஃபிகேஷன் செய்து கொள்வதுதான் அது. குறிப்பாக ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனத்தின் பைக்குகளில்தான், சைலென்சர்கள் அதிகளவில் மாடிஃபிகேஷன் செய்யப்படுகின்றன. இவை அதிக சத்தத்தை ஏற்படுத்துவதால், பலருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

அத்துடன் இது போன்ற சைலென்சர்கள் சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் ஏற்படுத்துகின்றன. எனவே சைலென்சர்களை மாடிஃபிகேஷன் செய்வதற்கு அரசு தடை விதித்துள்ளது. ஆனால் சட்ட விரோதம் என்பதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல், ராயல் என்பீல்டு பைக் வைத்துள்ள பலரும் சைலென்சர்களை மாடிஃபிகேஷன் செய்து வருகின்றனர்.

அவர்களுக்கு காவல் துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தக்க பாடம் ஒன்றை தற்போது புகட்டியுள்ளனர். ஆம், விதிமுறைகளுக்கு புறம்பான சைலென்சர்களை பொருத்தியிருந்த 571 ராயல் என்பீல்டு பைக்குகளை புனே (Pune) காவல் துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் சமீபத்தில் பறிமுதல் செய்துள்ளனர்.

அத்துடன் அந்த பைக்குகளில் இருந்த சைலென்சர்களை அகற்றி, அவற்றை ரோடு ரோலர் (Road Roller) மூலம் நசுக்கி அழித்துள்ளனர். காவல் துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் இதனுடன் நிற்கவில்லை. இந்த நிகழ்வை வீடியோ எடுத்து வெளியிட்டும் உள்ளனர். இந்த வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

இனிமேல் விதிமுறைகளுக்கு புறம்பான சைலென்சர்களுடன் யாரும் பைக் ஓட்ட கூடாது என்பதற்காகவே இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்டுள்ள பைக்குகளில், ராயல் என்பீல்டு புல்லட் (Royal Enfield Bullet), ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350), ராயல் என்பீல்டு கிளாசிக் 500 (Royal Enfield Classic 500) மற்றும் ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு (Royal Enfield Thunderbird) போன்றவை அடங்கும்.

ஆனால் சைலென்சர்களை ரோடு ரோலர் கொண்டு அழிப்பது இது முதல் முறை கிடையாது. ஐதராபாத் (Hyderabad) உள்பட இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும், இதற்கு முன்னதாக இதே போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் வாகன உரிமையாளர்கள் பலர் இன்னமும் மாறாமல் இருப்பது வேதனையான ஒரு விஷயம்தான்.

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *