போன், வாட்ச், இயர் பட்ஸ்.. ஒரே நாளில் 3 தயாரிப்புகளை ரிலீஸ் செய்யும் ஹானர்

பிரபல சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹானர் இந்தியாவில் இன்று தனது புதிய Honor X9b ஸ்மார்ட்போனை அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளது. இந்த தயாரிப்போடு சேர்த்து ஹானர் சாய்ஸ் எக்ஸ்5 (Honor Choice X5) என்ற இயர்பட்ஸையும், ஹானர் சாய்ஸ் வாட்ச் (Honor Choice Watch) என்ற ஸ்மார்ட் வாட்ச்சையும் வெளியிட உள்ளது.

ஹானர் நிறுவனத்தின் வரவிருக்கும் புதிய இயர்பட்ஸானது இன்-இயர் டிசைன் மற்றும் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டென்ஸிற்கான IP54 ரேட்டிங்குடன் வரும் என டீஸர் வெளிப்படுத்துகிறது. மறுபக்கம் Honor Choice Watch-ஆனது 1.95-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் மற்றும் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 12 நாட்கள் பேட்டரி லைஃபை வழங்குவதாக கூறப்படுகிறது. Honor Choice X5 மற்றும் Honor Choice Watch ஆகிய தயாரிப்புகள் அமேசான் மூலம் விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹானர் நிறுவனம் தனது சமீபத்திய அறிக்கையில் பிப்ரவரி 15ல் இந்தியாவில் ஹானர் சாய்ஸ் இயர்பட்ஸ் எக்ஸ்5 மற்றும் ஹானர் சாய்ஸ் வாட்ச் தயாரிப்புகள் வெளியிடப்படும் என்று உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்த தயாரிப்புகளோடு சேர்த்து Honor X9b மொபைலும் இந்தியாவில் இதே நாளில் அறிமுகமாக உள்ளது. ‘எக்ஸ்’ சீரிஸ் வெளியீட்டின் மூலம் அனைத்து தரப்பிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு தேவையானதை வழங்க நோக்கம் கொண்டுள்ளதாக ஹானர் கூறுகிறது. இதற்கிடையே வரவிருக்கும் இயர்பட்ஸ் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்சின் டிசைன் மற்றும் ஸ்பெசிஃபிகேஷன்கள் பற்றிய ஒரு பார்வையை அமேசான் வழங்கி இருக்கிறது.

இதன்படி Honor Choice X5 இயர்பட்ஸானது ergonomic இன்-இயர் டிசைன் மற்றும் 30dB ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) சப்போர்ட்டை கொண்டிருக்கும்.இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 35 மணிநேரம் வரை பேட்டரி லைஃபை வழங்கும் என குறிப்பிடப்பட்டள்ளது. இந்த இயர்பட்ஸ் Honor AI Space அம்சத்தையும் சப்போர்ட் செய்யும். இந்த அம்சம் இரண்டு டிவைஸ்களுக்கு இடையே ஸ்மார்ட் ஸ்விட்ச் செய்ய யூஸர்களை அனுமதிக்கிறது.

இந்நிலையில் ஹானர் சாய்ஸ் ஸ்மார்ட்வாட்ச் ஒரு இன்-பில்ட் ஹானர் ஹெல்த் ஆப்-ஐ கொண்டிருக்கும் என்பதை டீஸர் வெளிப்படுத்துகிறது. இது 1.95-இன்ச் ஸ்கொயர்-ஷேப்ட் AMOLED தின் டிஸ்ப்ளே மற்றும் இன்பில்ட் ஜிபிஎஸ் மற்றும் பில்ட்-இன் ஜிபிஎஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் ஒன்-கிளிக் SOS காலிங் அம்சம் வழங்கும், மேலும் இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 12 நாட்கள் வரை பேட்டரி லைஃபை வழங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இதில் 120 ஒர்க்அவுட் மாடல்ஸ் மற்றும் 5ATM வாட்டர் ரெசிஸ்டன்ஸை கொண்டிருக்கும்.

பிப்ரவரி 15-ல் அறிமுகமாகவுள்ள Honor 9Xb ஸ்மார்ட்போன் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய நாடுகளில் கிடைக்கிறது. இந்தியாவில் அறிமுகமாகவிருக்கும் Honor 9Xb-ல் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 6 ஜெனரல் 1 சிப்செட்டை கொண்டிருக்கும்.

மேலும் இது 6.78-இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளே மற்றும் 108-மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா யூனிட்டை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இது 35W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான சப்போர்ட்டுடன் கூடிய 5,800mAh பேட்டரி பேக்கை கொண்டிருக்க வாய்ப்புள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *