வாட்ஸ்அப் அழைப்பு இனி இன்னும் ஈசியாகும்.. வருகிறது சூப்பரான அப்டேட்..!

பொதுவாக நமது போனில் இருந்து அடிக்கடி நாம் மெசேஜ் அல்லது போன் செய்யக்கூடிய பிடித்தமான நபர்களின் பெயர் முதன்மையாக வர வேண்டும் என்று நாம் அனைவருமே ஆசைப்படுவோம். இது சம்பந்தப்பட்ட ஒரு அம்சம் வாட்ஸ்அப் அப்ளிகேஷனில் வெளியாக உள்ளது. அது குறித்து இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம். iOS போனிலிருந்து தங்களது ஃபேவரட் காண்டாக்ட்களுக்கு யூசர்கள் மிகவும் சௌகரியமான முறையில் போன் கால் செய்வதற்கான அம்சத்தை தற்போது மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் உருவாக்கி வருகிறது. கால்ஸ் டேபின் மேல் புறத்தில் ஒரே ஒரு டாப் செய்வதன் மூலமாக இந்த அம்சத்தை நாம் பயன்படுத்தலாம் என்பதை WABetaInfo தெரிவித்து உள்ளது.

கால்ஸ் டேபில் இருந்து நமக்கு மிகவும் பிடித்தமான காண்டாக்ட்களுக்கு போன் செய்வதற்கான விரைவான மற்றும் குறுக்கு வழியாக இது அமைவதால் வாட்ஸ்அப் அப்ளிகேஷனின் ஒட்டுமொத்த அனுபவத்தை இது சிறந்த முறையில் மேம்படுத்த உதவும். “தங்களுக்கு மிகவும் விருப்பமான காண்டாக்ட்களுடன் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்வதற்கு அனுமதிப்பதன் மூலமாக இந்த அம்சம் யூசர் அனுபவத்தை மேம்படுத்த உதவும் என்பதை நாங்கள் நம்புகிறோம். மேலும் இந்த அம்சம் தொடர்பு செயல்முறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது.” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“ஒரு சில காண்டாக்ட்களை ஃபேவரெட்கள் பட்டியலில் சேர்ப்பதன் மூலமாக அவர்களது பெயரை காலிங் இன்டர்ஃபேசில் முதன்மையாக வைத்து, அவர்களுக்கு உடனடியாக போன் செய்வதற்கான அமைப்பை உருவாக்கி வைக்கலாம்,” என்றும் அந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. ஃபேவரெட் காண்டாக்ட்களை சேர்ப்பதற்கான இந்த அம்சம் தற்போது வளர்ச்சி கட்டத்தில் உள்ளது. மேலும் வாட்ஸ்அப் அப்ளிகேஷனின் எதிர்கால அப்டேட்டில் இந்த புதிய அம்சம் கிடைக்க பெறும் என்பதை நம்பலாம் என்பதையும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

அதே நேரத்தில் ஐபோன் யூசர்களுக்கு மற்றுமொரு புதிய அம்சத்தை வாட்ஸ்அப் அப்ளிகேஷன் வெளியிட்டு வருகிறது. அந்த அம்சத்தில் ஐபோன் யூசர்கள் தங்களுக்கு பிடித்த வகையில் ஸ்டிக்கர்களை உருவாக்கி, அதனை எடிட் செய்து ஷேர் செய்வதற்கான அனுமதியை வழங்குகிறது. “இனி உங்களது போட்டோக்களை ஸ்டிக்கர்களாக மாற்றலாம் அல்லது ஏற்கனவே இருக்கும் ஸ்டிக்கர்களை எடிட் செய்வதற்கான அனுமதியை பெறுகிறீர்கள். இந்த அம்சம் iOS போன்களில் இப்போது வெளியாகிறது.” என்று வாட்ஸ்அப் அப்ளிகேஷன் அதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தது.

இந்த அம்சத்துடன் நீங்கள் உங்கள் கேலரியில் உள்ள போட்டோக்களை ஸ்டிக்கர்களாக மாற்றலாம் அல்லது ஏற்கனவே போனில் இருக்கக்கூடிய ஸ்டிக்கர்களை உங்கள் விருப்பப்படி மாற்றி எடிட் செய்யலாம். இந்த அம்சம் நிச்சயமாக யூசர்களுக்கு சிறப்பான அனுபவத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *