Actress Alya Manasa: ‘பழி வாங்குவேன்.. ‘- அட கடவுளே.. ஆல்யா மானசாவிற்கு இப்படி ஒரு கெட்ட பழக்கம் இருக்கா?
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, ‘ ராஜா ராணி ‘ சீரியல் ரசிகர்களிடம் ஏகபோக வரவேற்பை பெற்றது.
இந்த சீரியலில் நடித்த நாயகன் சஞ்சீவும், நாயகி ஆலியா மானசாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2020 ஆம் ஆண்டு ஐலா என்ற பெண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்ததால் சிறிய இடைவெளி எடுத்து விட்டு ஆலியா மானசா தனது உடல் எடையை அசத்தலாகக் குறைத்து மீண்டும் சீரியல் நடிக்க தொடங்கி அசத்தி வருகிறார். இவர் தற்போது இனியா சிரீயலில் நடித்து வருகிறார்.
ஆல்யா மானசா தற்போது இனியா தொடரிலும், சஞ்சீவ் கயல் தொடரிலும் நடித்து வருகின்றனர். டிஆர்பியில் கயல் முதல் இடத்திலும், இனியா இரண்டாவது இடத்திலும் உள்ளது.
இதனிடையே சமீபத்தில் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் பிரபல யூடியூப் சேலனுக்கு பேட்டி அளித்து இருந்து இருந்தார்கள்.
ஆல்யா மானசா கூறுகையில், ” என்னிடம் ஒரு சில கெட்ட பழக்கங்கள் இருக்கிறது. எனக்கு எளிதாக கோபம் வந்துவிடும். சில நேரத்தில் பழி வாங்க கூட நினைப்பேன். ஆனால் இது இப்போது இல்லை. முன்பு எல்லாம் வந்தது. எப்போதாவது தான் கோபம் வரும். எங்களுக்குள் சண்டை வந்தால் அந்த நாளே சரி இருக்காது. சண்டை போட்டால் பாவமாக இருக்கும்.
எங்களுக்கு விவாகரத்து என சொல்வதை பார்த்தால் நாங்கள் கண்டு கொள்ளமாட்டோம் ” என்றார்.
சீரியல்களில் பிஸியாக இருக்கும் சூழலிலும் இவர்கள் இருவரும் இணைந்து யூ-டியூப் பக்கம் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் அவர்கள் வெளியே செல்வது, வீட்டில் நடக்கும் நிகழ்வுகள் குறித்த வீடியோவை பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ஒரு முறை சீரியலில் சஞ்சீவ் ரொமான்ஸ் செய்யும் போது பொசசிவ்னஸ் ஆகி இருக்கிறதா? என்ற கேள்வி ஆல்யா மானசாவிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஆல்யா மானசா, “என்ன பண்ணிட்டு இருக்கீங்க சீரியலில் என்று கேட்டு முதலில் அவர் தான் பொசசிவ் ஆகிறார். இங்க தான் இரண்டு பக்கமும் காதலித்து திருமணமாகிவிட்டது. அந்த பக்கம் தான் ஒரு தலக்காதல்.
சீரியலில் பார்த்துவிட்டு அப்போ அப்போ ஒரு லுக் விடுவார். மற்ற கணவர்கள் போல் தான் என் கணவருக்கும் பொசசிவ் ஆகும். பார்த்து மா அப்படி என்று சொல்லுவார்.