Vijay Antony: “அது சக்ரியா தான்… நல்ல மீனிங்ல புரிஞ்சுக்கோங்க..” விஜய் ஆண்டனி கொடுத்த விளக்கம்!
சென்னை: சுக்ரன் திரைப்படம் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, தற்போது ஹீரோ, இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகக் கலைஞராக வலம் வருகிறார்.
தனது இசையில் வெளியாகும் பாடல்களில் வித்தியாசமான வார்த்தைகளை போட்டு அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். இந்நிலையில் நினைத்தாலே இனிக்கும் படத்தில் இடம்பெற்ற பியா பியா பாடல் வரி குறித்து விஜய் ஆண்டனி கொடுத்த ‘அடேங்கப்பா’ விளக்கம் டிவிட்டரில் வைரலாகி வருகிறது.
விஜய் ஆண்டனி கொடுத்த ‘அடேங்கப்பா’ விளக்கம்: தமிழில் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருகிறார் விஜய் ஆண்டனி. எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கிய சுக்ரன் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, தொடர்ந்து டிஷ்யூம், நன் அவனில்லை, காதலில் விழுந்தேன், நினைத்தாலே இனிக்கும், வேட்டைக்காரன், அங்காடித் தெரு, வெடி, வேலாயுதம் உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார்.