‘சாட்டை’ நடிகர் யுவனுக்கு டும் டும்
சாட்டை, அடுத்த சாட்டை, கமர்கட்டு, கீரிப்புள்ள, இளமி, அய்யனார் வீதி போன்ற பல படங்களில் கதாநாயகனாக நடித்தவர் யுவன் என்கிற அஜ்மல் கான்.
இவருடைய தந்தை பிரோஸ் கான் ஒரு தொழிலதிபர். இவரும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர். யுவனுக்கும், கும்பகோணம் தங்க விலாஸ் அதிபர் சாதிக் அலி மகள் ரமீசா கஹானிக்கும் நிக்கா மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடந்தேறியது.
இந்நிகழ்ச்சி விஜிபி ரிசார்ட்டில் பிரமாண்டமான மேடை அமைத்து அதில் திரளான மக்கள் முன்னணியில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் போன்ற அரசியல் தலைவர்களும், மன்சூர் அலிகான், ரியாஸ்கான், உமா ரியாஸ்கான், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட திரையுலக மற்றும் பல பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.