Curd Vada : தயிர் வடை! பார்த்தாலே எச்சில் ஊறவைக்கும்! யம்மியான ஈவ்னிங் ஸ்னாக்ஸ்!

தேவையான பொருட்கள்

கருப்பு உளுந்து – 2 கப்

பச்சை மிளகாய் – 4

வறுத்த சீரகம் – அரை ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

சர்க்கரை – அரை ஸ்பூன் (தேவைப்பட்டால் பயன்படுத்திக்கொள்ளலாம்)

எண்ணெய் – வடைகளை பொரித்து எடுக்குமளவுக்கு

தயிர் – 2 கப்

மிளகாய் தூள் – அரை ஸ்பூன்

செய்முறை

உளுந்தை 2 மணி நேரங்கள் நன்றாக ஊறவைத்துக்கொள்ள வேண்டும்.

ஊறிய உளுந்தை பச்சை மிளகாயுடன் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் தாராளமாக எண்ணெய் ஊற்றி, கொதிக்க வைத்து, சிறு சிறு உருண்டைகளாக மாவை எடுத்துப்போட்டு பொரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

வடைகள் பொன்னிறமானவுடன் எண்ணெயில் இருந்து எடுத்து எண்ணெய் வடிகட்டியில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அருகில் மற்றொரு பாத்திரத்தில் உப்பு நீர் வைத்து அதில் சில நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.

தயிரை நன்றாக அடித்து அதில் உப்பு, சர்க்கரை, வறுத்த சீரகம் சேர்த்து நன்றாக கலந்து, தண்ணீரில் போட்ட வடைகளை எடுத்து தண்ணீரை பிழிந்துவிட்டு, தயிரில் சேர்க்க வேண்டும். அது தயிரில் நன்றாக ஊறட்டும்.

மேலே சிறிது மிளகாய் தூளை தூவி பரிமாறலாம். இதனுடன் சிறிது காராபூந்தி, மல்லித்தழையும் தூவலாம்.

குறிப்பு

மீந்துபோன வடையில் கூட தயிர் வடை செய்யலாம். எண்ணெயில் இருந்து எடுத்த உடனே வடையை தண்ணீரில் சேர்க்க வேண்டும். அப்போதுதான் அதுதயிரை நன்றாக உறிஞ்சும்.

துருவிய கேரட் கூட தூவி பரிமாறலாம். கடுகு தாளித்து சேர்த்தும் பரிமாறலாம். தேங்காய் துண்டுகளை சேர்த்தும் பரிமாறலாம். இவ்வாறு செய்யும்போது கடித்து சாப்பிட கூடுதல் சுவையைத்தரும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *