IND vs ENG : அஸ்வின் மாபெரும் சரித்திர சாதனை.. முன்பே வாழ்த்து சொன்ன நடிகர் தனுஷ்.. என்ன காரணம்?
ராஜ்கோட் : இந்திய அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கிரிக்கெட் உலகில் சரித்திர சாதனை ஒன்றை எதிர்நோக்கி இருக்கிறார்.
டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்கள் என்ற மைல்கல் சாதனையை அவர் எட்ட இருக்கிறார்.
அதற்கு அஸ்வினுக்கு இன்னும் 1 விக்கெட் மட்டுமே தேவை. இந்த நிலையில், இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி துவங்கியது. இந்தப் போட்டியில் எப்படியும் அஸ்வின் 500 விக்கெட்கள் என்ற மைல்கல் சாதனையை எட்டி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஸ்வினின் சாதனையை கிரிக்கெட் உலகமே எதிர்பார்த்து இருக்கும் நிலையில் நடிகர் தனுஷ் அந்த சாதனையை செய்யும் முன்பே அஸ்வினுக்கு வாழ்த்து கூறி இருக்கிறார். இதை கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்க்கவில்லை. ஒரு தமிழக வீரர், கிரிக்கெட்டில் மாபெரும் சரித்திர சாதனை நிகழ்த்த இருக்கிறார் என்பதால் அதை கொண்டாடும் வகையில் தனுஷ் இவ்வாறு வாழ்த்து கூறி இருக்கலாம் என தெரிகிறது.
ட்விட்டரில் தனது வாழ்த்து செய்தியை வெளியிட்டு இருக்கிறார் தனுஷ். அதில், “அஸ்வின் முன்னே செல்லுங்கள். உங்கள் 500 விக்கெட் சாதனைக்காக காத்திருக்கிறோம். ஓம் நமச்சிவாய” எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்தியா – இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. அதனால், அஸ்வின் சாதனை சற்று தாமதம் ஆகி இருக்கிறது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 33 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த போதும், ரோஹித் சர்மா – ரவீந்திர ஜடேஜா ஜோடி பொறுப்பாக ஆடி ரன் சேர்த்து சரிவில் இருந்து அணியை மீட்டனர்.