ஓராண்டில் 450% லாபம் தந்த பங்கு! அட இது தெரியாம போச்சே

இந்திய பங்குச்சந்தைகளில் மல்டிபேக்கர் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை தந்து வருகின்றன. அப்படி ஓராண்டிலேயெ 450% லாபம் தந்த ஒரு நிறுவனத்தின் பங்குகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மஃபின் கிரீன் பைனான்ஸ் லிமிடெட் (Mufin Green Finance Ltd) டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வங்கி அல்லாத ஒரு நிதி நிறுவனமாகும்.

இந்த நிறுவனம் முழுக்க முழுக்க எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் எலக்ட்ரிக் தயாரிப்புகளுக்கு கடன் அளிப்பதில் கவனம் செலுத்து வருகிறது. 14 மாநிலங்களில் இது கிளைகளை நிறுவி , எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கான கடன்களை வழங்குகிறது. இதுவரை எலக்ட்ரிக் தயாரிப்புகளுக்கு என 300 கோடி ரூபாய் வரை கடன் வழங்கியுள்ளது.ஓராண்டில் 450%க்கு மேல் லாபம்: இந்த NBFC பங்கு பங்குச்சந்தையில் ஓராண்டிலேயே 450% லாபம் தந்துள்ளது.

வரும் காலங்களிலும் இந்த பங்கின் விலை ஏற்றத்தில் தான் இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். இன்றைய மும்பை பங்குச்சந்தையில் மஃபின் கிரீன் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 250.75 ரூபாய் என உச்சம் கண்டது . கடந்த 8ஆம் தேதி இது தனது 52 வார கால உச்சமான 273.10 ரூபாயை எட்டியது.அசர வைக்கும் லாபம்: கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனமானது 3,604 கோடி ரூபாயாக உள்ளது. ஓராண்டில் மட்டும் நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு 44 ரூபாயில் இருந்து 250.75 ரூபாய் என உயர்ந்துள்ளது.

பேடிஎம் பங்குகள் 73.66 சதவீதம் சரிவு.. ஐபிஓ முதலீட்டாளர்கள் ரத்தக்கண்ணீர்..!!இந்த நிறுவனத்தின் வருவாய் கடந்த 2022இல் 22.90 15 கோடி ரூபாயாக இருந்த நிலையில் 2023இல் 45.5 கோடி ரூபாய் என உயர்வு கண்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் இந்த மல்டிபேக்கர் பங்கு நிறுவனத்தின் மொத்த வருவாய் 271.78 கோடி, இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் 106.60 கோடி ரூபாய் என இருந்தது.ஓராண்டிலேயே வருவாய் விகிதம் 155% அதிகரித்துள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *