திடீரென 67% உயர்ந்த அமெரிக்க நிறுவனத்தின் பங்கு! ஒரு பூஜ்யம் தான் காரணம்!
நிறுவனத்தின் வளர்ச்சி குறித்த புள்ளி விவர தகவல்கள் வெளியீட்டில் நிகழ்ந்த சிறு தவறு , நிறுவனத்தின் பங்குகளை திடீரென 67% உயர செய்தது.இந்தியாவில் இயங்கும் ஓலா, உபர் , ரேபிடோ போல அமெரிக்கா போக்குவரத்து சேவைகளை வழங்கும் ஒரு நிறுவனம் தான் லிஃப்ட்(Lyft).
2024ஆம் ஆண்டில் நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் எதிர்கால வளர்ச்சி விகிதம் எப்படி இருக்கும் என்பது குறித்த கணிப்புகள் ஆகியவற்றை விளக்கும் செய்தியாளர் சந்திப்பு அமெரிக்காவில் நடைபெற்றது. நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிஷர், செய்தியாளர்களிடம் அறிக்கையை வாசித்தார்.
அப்போது நிறுவனத்தின் வளர்ச்சி கணிப்பு 500 அடிப்படை புள்ளிகளாக இருக்கும் என அறிவித்தார்.67% உயர்ந்த பங்குகள்: இந்த அறிவிப்பை அடுத்து லிஃப்ட் நிறுவனத்தின் மதிப்புகள் பங்குச்சந்தையில் எகிற தொடங்கின. கிட்டத்தட்ட 67 % பங்கு மதிப்புகள் உயர்ந்தன, முதலீட்டாளர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். வழக்கமான நாளொன்று 13.6 மில்லியன் பங்குகள் வர்த்தகமாகும் நிலையில் திடீரென 47.8 மில்லியன் பங்குகளாக உயர்ந்து விலையும் அதிகரித்தது.