புதிய சாதனை படைக்க காத்திருக்கும் இஸ்ரோ..! ரூ.9000 கோடி ககன்யான் திட்டப் பணிகள் தீவிரம்
உலகிலேயே எந்த நாடுகளும் செல்லாத நிலவின் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாக லேண்டரை தரையிறக்கி சந்திராயன் -3 திட்டம் மூலம் கடந்த ஆண்டு விண்வெளி ஆய்வில் புதிய சாதனை படைத்தது இஸ்ரோ.
அடுத்ததாக ஆதித்யா எல்1 கலத்தை ஏவி சூரியன் பற்றி ஆய்வில் கால்பதித்த இஸ்ரோ, இந்த ஆண்டு மற்றொரு சாதனை பயணத்திற்கு தயாராகி வருகிறது. ககன்யான் திட்டம்: விண்வெளி ஆராய்ச்சியின் அடுத்த மைல்கல்லாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் தற்போது இஸ்ரோ தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் படி இரண்டு ஆள்ளில்லா விண்கலத்தைல LEO எனப்படும் Low Earth Orbit-க்கு அனுப்பும், 1 விண்கலத்தை மனிதர்களுடன் அனுப்பும்.இஸ்ரோ மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவது இதுவே முதன்முறை. இந்த திட்டத்திற்காக 9,023 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.2024 ககன்யான் ஆண்டாக இருக்கும்: 2024ஆம் ஆண்டு ககன்யான் ஆண்டாக இருக்கும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி திட்டத்தை நிறைவேற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு வெளிநாடுகளில் பயிற்சி பெற்று வருகின்றனர்.இந்த ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படும் சுகன்யா திட்டம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி திரும்ப பத்திரமாக பூமிக்கு திரும்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.எதிர்கால இந்திய விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களுக்கு அடித்தளமாக இது இருக்கும்.