ஜப்பான் நாட்டில் ரெசிஷன்: தமிழ்நாட்டுக்கு இவ்வளவு பிரச்சனை இருக்கா..? எந்தத் துறைக்கு அதிக பாதிப்பு..?,
ஜப்பான் நாட்டில் உள்நாட்டுத் தேவையில் ஏற்பட்ட பெரிய அளவிலான சரிவு தான் இந்த மோசமான நிலைக்கு முக்கியக் காரணமாகும்.
ஜப்பான் பொருளாதாரம் செப்டம்பர் காலாண்டில் 3.3 சதவீதமாகக் குறைந்த வேளையில், டிசம்பர் காலாண்டில் 0.4 சதவீதமாகச் சரிந்துள்ளது. இதேவேளையில் ஜப்பான் யென் மதிப்பு ஒரு வாரத்திற்கு முன்பு 3 மாத சரிவை தொட்டது குறிப்பிடத்தக்கது. பொதுவாக 2 காலாண்டுகளாக ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து சரிவு பாதையில் இருந்தால் ரெசிஷன் எனக் கூறப்படும்.
இந்த ரெசிஷன் காரணமாக அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்த உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக இருந்த ஜப்பான் தற்போது 4வது இடத்திற்குத் தள்ளப்பட்டு, ஜெர்மனி 3வது இடத்திற்கு உயர்ந்துள்ளது. ஜப்பான் பொருளாதாரம் ரெசிஷனுக்குள் நுழைந்தது மூலம் தமிழ்நாட்டுக்கு என்ன பாதிப்பு..?ஜப்பான் பொருளாதாரம் ரெசிஷனுக்குள்ள நுழைந்ததைத் தொடர்ந்து ஜப்பான் அரசும், அந்நாட்டின் மத்திய வங்கியான பேங்க் ஆப் ஜப்பான் நாணய புழக்க அளவீட்டைத் திருத்தி நாட்டில் டிமாண்ட்-ஐ அதிகரிக்க ஊக்குவிக்கும்.
ஏற்கனவே ஜப்பான் நாட்டின் ஏற்றுமதி வர்த்தகம் பாதித்துள்ள நிலையில், இந்த ரெசிஷன் மூலம் அந்நாட்டின் புதிய முதலீடுகளுக்குத் தற்காலிக முட்டுக்கட்டை விழும்.ஜப்பான் இந்தியா மத்தியில் நீண்ட கால வர்த்தகம் மற்றும் நட்புறவு இருக்கும் காரணத்தால் பல துறையில் ஜப்பான் நாட்டின் முதலீடுகள் உள்ளது.