தங்கத்தை வாங்காதடா பரமா.. அரசு திரும்பத் திரும்பச் சொல்வது ஏன்..?!
ஆனால் மத்திய அரசு ஏன் இப்படிச் செய்கிறது..? அதற்கான காரணம் என்ன..?தங்கம் இந்தியர்களுக்கு விருப்பமான முதலீட்டு வடிவமாக இருப்பது மட்டும் அல்லாமல் நகைகள் மூலம் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறியுள்ளது. மக்கள் தங்கத்தை மதிப்புக் கூட்டு முதலீடாகவும், பணவீக்கத்திற்கு எதிரான போராடும் ஒரு கருவியாகப் பார்க்கின்றனர். இது இரண்டுமே சரியானது தான்.
ஆனாலும் மத்திய அரசு மக்கள் தங்கத்தை வாங்குவதை ஏன் நிறுத்த வேண்டும் என விரும்புகிறது?பொதுவாக இந்தியாவில் அதாவது உள்நாட்டில் நிறையத் தங்கத்தை உற்பத்தி செய்யப்படுவது இல்லை. இந்தியா ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 டன் தங்கத்தை மட்டுமே உற்பத்தி செய்கிறது. இந்திய மக்களின் ஆர்வத்திற்கு இது எப்படிப் போதுமானதாக இருக்கும்.மக்கள் மத்தியில் டிமாண்ட் அதிகமாக இருக்கும் பட்சத்தில் நம் நாட்டில் வசிப்பவர்கள் தங்கத்தை வாங்க விரும்பினால், மொத்த விற்பனையாளர்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து ரீடைலில் விற்கப்படுகிறது.
இப்படி இந்தியா ஒவ்வொரு ஆண்டும் 800-900 டன் தங்கத்தை இறக்குமதி செய்கிறது!.2023ல் தங்கத்தை இறக்குமதி செய்ய மட்டுமே ரூ.2.8 லட்சம் கோடி செலவிட்டோம்! இது கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக நாம் இறக்குமதி செய்யும் இரண்டாவது அதிக மதிப்புடைய பொருளாக உள்ளது.தங்கம் விலை குறையபோகுது.. பட்ஜெட்-ல் காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!
தங்கத்தை இறக்குமதி செய்யவேண்டுமெனில் ரூபாய் நாணயத்தில் செய்ய முடியாது, வெளிநாட்டு நாணயங்களில் (பெரும்பாலும் டாலரில்) பணத்தில் வாங்க முடியும். மேலும் நமது ஏற்றுமதியை விட நமது இறக்குமதிகள் பெரியதாக இருந்தால், அது வர்த்தகப் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும்.