உபர் நிறுவனத்துடன் இணைந்து டாடா குழுமம் போடும் பலே திட்டம்!
இந்த நிலையை மாற்ற, ஆன்லைன் டாக்சி சேவை நிறுவனமான உபர் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட டாடா குழுமம் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.டாடாவின் டிஜிட்டல் தளங்களில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் உபர் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட டாடா குழுமம் திட்டமிட்டிருப்பதாக தி எக்னாமிக் டைம்ஸ் செய்து வெளியிட்டுள்ளது. இதன் படி உபர் சேவைகள் டாடா டிஜிட்டல் தளத்துடன் ஒருங்கிணைக்கப்படும் என தெரிகிறது.
டாடா நிறுவனம் பெரிய எதிர்பார்ப்புகளுடன் சூப்பர் அப் என்ற பெயரில் Tata Neu செயலியை அறிமுகம் செய்தது. அமேசான், பிளிப்கார்ட் தளங்களுக்கு இது கடும் போட்டியாக இருக்கும் என கருதப்பட்டது. ஆனால் இந்த ஈ-காமர்ஸ் தளம் பெரிதளவில் வாடிக்கையாளர்களை ஈர்க்கவில்லை.இருப்பினும் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக இந்த தளத்தில் பல்வேறு மேம்பாடுகளை டாடா நிறுவனம் கொண்டுவந்துள்ளது.
உபர் – டாடா குழும தலைவர்கள் சந்திப்பு: கடந்த ஆண்டு டேவோஸில் நடைபெற்ற மாநாட்டில் உபர் நிறுவன தலைமை செயல் அதிகாரி டாரா கோஸ்ரோஷாஹி மற்றும் டாடா சன்ஸ் சேர்மன் சந்திரசேகரன் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர். கூடிய விரைவில் இந்தியா வருகை தர இருக்கும் உபர் நிறுவன தலைமை செயல் அதிகாரி டாரா கோஸ்ரோஷாஹி, மீண்டும் ஒரு முறை சந்திரசேகரனை சந்தித்து பேச இருப்பதாக தெரிகிறது.டாடா – உபர் நிறுவனங்களுக்கு இடையிலான உறவு: டாடா மற்றும் உபர் நிறுவனங்கள் ஏற்கனவே மின்சார வாகன துறையில் ஒப்பந்தம் செய்துள்ளன.
கடந்த ஆண்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மற்றும் உபர் நிறுவனம் இணைந்து மேற்கொண்ட ஒப்பந்தத்தில், ஊபருக்கு 25,000 மின்சார வாகனங்கள் வழங்கப்படும் என்று டாடா உறுதி அளித்துள்ளது. இந்த உறவு டிஜிட்டல் தளத்திலும் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.நகரங்களை குறி வைக்கும் டாடா: தற்போதைக்கு இணைந்து செயல்படுவது குறித்து டாடா குழுமம் மற்றும் உபர் நிறுவனங்களில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட பின்னர் முழுமையான அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.