என் தந்தையும் நாட்டுக்காக விளையாட நினைத்தார்..அவர் கனவை நான் நிறைவேற்றினேன்..சர்பிராஸ் கான் உருக்கம்
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமான சர்ஃபிராஸ் கான், பல ஆண்டு காத்திருப்புக்குப் பின் தன்னுடைய முதல் சர்வதேச போட்டியை இந்திய அணிக்காக விளையாடினார். இந்தப் போட்டிக்கு முன் சர்பாஸ் கான் தன்னுடைய குடும்பத்தினருடன் கட்டி அணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளம் முழுவதும் ஆக்கிரமித்து இருக்கிறது.
சர்பிராஸ்கான் இந்த கனவை பார்த்து பலரும் கண்கலங்கி இருக்கிறார்கள். தனது தந்தை குறித்து பல கருத்துக்களை செய்தியாளர்களிடம் பேசினார். அதை தற்போது பார்க்கலாம். முதல்முறையாக நான் மைதானத்திற்குள் வந்து இந்திய அணிக்கான தொப்பியை வாங்கினேன். என்னுடைய தந்தை முன்னாள் ஆறு வயதில் என்னுடைய கிரிக்கெட் பயிற்சியை தொடங்கினேன்.
தற்போது என் நாட்டுக்காக என் தந்தை முன் விளையாட வேண்டும் என்பது என்னுடைய கனவு. என்னுடைய பேட்டிங் வாய்ப்பிற்காக நான் நான்கு மணி நேரம் காத்துக் கொண்டிருந்தேன். இந்த வாய்ப்புக்காக நான் பல ஆண்டுகள் காத்திருந்தேன். இன்னும் சில மணி நேரம் காத்திருப்பதில் எந்த தவறும் இல்லை என நினைத்தேன். முதலில் களத்திற்குள் சென்றபோது முதல் சில பந்துகளை எதிர்கொள்ள பதற்றமாக இருந்தது.
ஆனால் இதற்காகவே நான் தனி பயிற்சி எடுத்ததால் சில பந்துகளை எதிர்கொண்ட பிறகு அனைத்தும் சுலபமாக இருந்தது. முதலில் என் தந்தை இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்று நினைத்தார். ஆனால் அவரால் அது முடியவில்லை. அவருக்கு அப்போது யாரும் வீட்டிலிருந்து உதவவில்லை. தன் தந்தையால் முடியாத நிலையில் அவர் என்னை சிறுவயதில் இருந்து தயார்படுத்தினார்.
எனக்கு தேவையான உதவிகளை அவர் செய்தார். முதல் டெஸ்ட் போட்டியில் நான் எவ்வளவு ரன் அடிக்க வேண்டும் என்பது குறித்து யோசிக்கவில்லை. என் தந்தை முன் விளையாட வேண்டும் என்ற ஒரே விஷயம் தான் மனதிற்குள் ஓடிக் கொண்டிருந்தது. முதலில் அவர் ராஜ்கோட்டுக்கு வர விரும்பவில்லை. ஆனால் சிலர் தான் நீ உன் மகன் விளையாடுவதை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.
என்னுடைய மனைவியும் தந்தையும் இன்றைய நாள் குறித்து மிகவும் உணர்ச்சி வசப்பட்டார்கள். என்னுடைய தோள்களில் இருந்து பெரிய அழுத்தம் இறங்கிவிட்டது. இதற்கு காரணம் நான் போட்ட உழைப்பு தான் அது வீணாகவில்லை என்று சர்பிராஸ் கான் கூறினார். சர்பிராஸ்கானுக்கு முசிர் கான் என்ற ஒரு தம்பியும் இருக்கிறார். அவர் தற்போது தான் அண்டர் 19 கிரிக்கெட்டில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் ஜொலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.