ஜடேஜாவை திட்டாதீங்க! ரன் அவுட்டுக்கு பிறகு டிரஸிங் ரூம்மில் நடந்தது என்ன? சர்பிராஸ் கான் விளக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சர்பிராஸ் கான் தன்னுடைய அறிமுக டெஸ்டில் களமிறங்கினார். இந்த போட்டியில் அவர் சிறப்பாக விளையாடி ரசிகர்களின் மனதை ஈர்த்தார். கில் போன்ற வீரர்கள் எல்லாம் பந்துகளை எதிர்கொள்ளும் போது கொஞ்சம் தடுமாறினார்கள்.

ஆனால் கொஞ்சம் கூட தயக்கம் இன்றி தைரியமாக ஷாட்களை ஆடி ரன்களை சேர்த்தார். இந்த நிலையில் தன்னுடைய அறிமுக போட்டியில் சர்பிராஸ்கான் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜடேஜா செய்த தவறால் ரன் அவுட் ஆனார்.

இதனால் ஜடேஜாவின் ரசிகர்கள் கடுமையாக திட்டி வருகிறார்கள். மேலும் கேப்டன் ரோகித் சர்மா கூட ஜடேஜாவை திட்டினார். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சர்பிராஸ் கான் ரன் அவுட் பிறகு ட்ரெஸ்ஸிங் ரூமில் என்ன நடந்தது என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் ரன் அவுட் என்பது போட்டியில் ஒரு பகுதி. இதே போல் சில சமயம் ரன் ஓடும்போது வீரர்களுக்குள்ளே சரியான தொடர்பு இல்லாமல் போகலாம்.

இதன் காரணமாக ரன் அவுட் நடக்கும். சில சமயம் நாம் அந்த ரன்னை எடுக்க முடியும்.நான் பேட்டிங் செய்ய வருவதற்கு முன்பே ஜடேஜாவிடம் பல விஷயங்கள் குறித்து பேசினேன். ஆடுகளம் எப்படி செயல்படுகிறது என்பது குறித்து கேட்டு அறிந்தேன். நான் பேட்டிங் செய்ய வந்தபோது கூட என்னிடம் பேசிக் கொண்டே இருங்கள் நான் விளையாடும் போது என்னிடம் பேசுங்கள் என்று கூறினேன்.

என்னுடைய கோரிக்கையை ஏற்று ஜடேஜா எனக்கு நல்ல ஆதரவு கொடுத்தார். நான் பேட்டிங் செய்யும்போது வந்து என்னுடன் பேசினார். அறிமுக போட்டியில் தாம் எப்படி உணர்ந்தேன் என்பது குறித்தும், இந்த பதற்றத்தை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும் ஜடேஜா எனக்கு அறிவுரை கூறினார். முதலில் எனக்கு களத்திற்கு வந்து விளையாடு போது கொஞ்சம் பதற்றம் இருந்தது.

பிறகு சிறிது நேரம் செலவழித்த பிறகு நான் என்னுடைய இயல்பான நிலைக்கு வந்து ரன்களை சேர்க்கத் தொடங்கினேன். அதன் பிறகு எனக்கு எந்த நெருக்கடியும் தெரியவில்லை. ரஞ்சி கிரிக்கெட்டில் எந்த ரசிகரும் உங்கள் போட்டியை பார்க்க மாட்டார்கள். ஆனால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் வந்து போட்டியை பார்ப்பார்கள். மேலும் சர்வதேச வீரர்களை ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் நாம் பார்க்க முடியாது என்று சர்பிராஸ் கூறினார். இந்த நிலையில் ஜடேஜா தனது சமூக வலைத்தள பக்கத்தில் என்னுடைய தவறுதான் ரன் அவுட்டுக்கு காரணம் என்று வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *