பிரித்தானியாவில் கைது செய்யப்பட்ட கொடூர தாய்! விரைவில் நாடுகடத்தல்

பிரித்தானியாவில் பெண்ணொருவர் தனது குழந்தைகளை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக கைது செய்யப்பட்டார்.

கொடூர கொலை
அமெரிக்காவின் Colorado நகரில் கிம்பெர்லீ சிங்லர் (35) என்ற பெண் தனது 9 மற்றும் 7 வயது குழந்தைகளை கொடூரமாக கொலை செய்துள்ளார். அதிர்ஷ்டவசமாக மற்றொரு 11 வயது மகள் அவரிடம் இருந்து உயிர்தப்பினார்.

முதலில் குழந்தைகளுக்கு தூக்க மருந்தை போதைப்பொருளாக கொடுத்த கிம்பெர்லீ, அதன் பின்னர் அவர்களின் தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கொலை செய்து 11 நாட்கள் கழித்து பிரித்தானியாவுக்கு தப்பியோடியுள்ளார். இதனையடுத்து லண்டன் ஹொட்டலில் தங்கியிருந்த கிம்பெர்லீ பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

பிரேதப் பரிசோதனை அறிக்கை
அதனைத் தொடர்ந்து அவரது முன்னாள் கணவர் கெவின் வென்ட்ஸ், கொல்லப்பட்ட குழந்தைகளான Elianna ‘Ellie’ Wentz (9), Aden Wentz (7) ஆகியோரின் உடல்களை அடையாளம் காட்டினார்.

முன்னதாக, El Paso County Coronor’s Office கடந்த வாரம் வெளியிட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கைகள், குழந்தைகள் இருவரும் துப்பாக்கிச் சூட்டு காயங்கள் மற்றும் கழுத்தில் வெட்டுக் காயங்களால் பாதிக்கப்பட்டிருந்தனர் என தெரிவித்தன.

மேலும், அவர்களின் ரத்தத்தில் Doxylamine எனும் சாத்தியமான நச்சு அளவுகள் காணப்பட்டது மற்றும் இது தூக்கத்திற்கு உதவி தரும் மற்றும் ஒவ்வாமை மருந்துகளில் பொதுவாக காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

நாடு கடத்தல்
இந்த நிலையில், மூன்று குழந்தைகளின் தாயான கிம்பெர்லீ அமெரிக்காவுக்கு நாடு கடத்த காத்திருக்கிறார். ஆனால் இந்த செயல்முறை பல மாதங்கள் ஆகலாம் என உள்ளூர் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் கிம்பெர்லீ வரும் 26ஆம் திகதி லண்டன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரை நாடு கடத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், இரண்டு கொலை மற்றும் ஒரு கொலை முயற்சி என 10 குற்றச்சாட்டுகளை அவர் எதிர்கொள்வார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *