என் அழகிய மனைவிக்கு காதலர் தின வாழ்த்து! அடுத்த சிலமணி நேரத்தில் உயிரிழந்த பிரித்தானியர்
தாய்லாந்துக்கு சுற்றுலா சென்ற பிரித்தானியர் ஒருவர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
பிரித்தானியர்
பிரித்தானியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தாய்லாந்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். அவர் பிரபல சுற்றுலாத் தீவான Phuket கடற்கரையில் விடுமுறையை கழித்துள்ளார்.
இந்த நிலையில் கடற்கரை பகுதிக்கு அவர் இருசக்கர வாகனத்தில் திரும்பியபோது, சுமார் 6 டன் எடை கொண்ட லொறி ஒன்று மோதியுள்ளது.
இதில் குறித்த பிரித்தானியர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். ஆனாலும் துரதிர்ஷ்டவசமாக அவரை காப்பாற்ற முடியவில்லை என அறிவிக்கப்பட்டது.
மனைவிக்கு வாழ்த்து
அவர் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, ஒன்லைனில் தன் மனைவிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
அதில், ‘எனது அழகான மனைவிக்கு ஒரு அற்புதமான காதலர் தின வாழ்த்தை கூற விரும்புகிறேன்’ என குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுதொடர்பான விவரங்கள் பிரித்தானிய தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.