பிரித்தானியாவில் பச்சிளம் குழந்தையின் உயிரைப் பறித்த கோர சம்பவம்: அதிரவைக்கும் புகைப்படங்கள்

மேற்கு யார்க்ஷயரின் லீட்ஸ் பகுதியில் நடந்த கொடூரமான கார் விபத்தில் பச்சிளம் குழந்தை ஒன்று பலியான நிலையில் மூன்று பேர் காயங்களுடன் தப்பியுள்ளனர்.

4 மாத குழந்தை ஒன்று
குறித்த கோர விபத்தில் 54 வயது சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 12ம் திகதி Vauxhall Vivaro வேன் ஒன்று வடக்கு நோக்கி பயணப்பட்ட நிலையில் Toyota Auris கார் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.

குறித்த கோர விபத்தானது கால்வர்லி மற்றும் ரோட்லி இடையே உள்ளூர் நேரப்படி 4.55 மணிக்கு நடந்துள்ளது. இதில் 4 மாத குழந்தை ஒன்று குற்றுயிராக மிட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், மரணமடைந்துள்ளது.

மேலும், டொயோட்டாவில் பயணித்த இரண்டு பெண்களும், விவாரோவில் பயணித்த ஒரு ஆணும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். வாகனங்கள் இரண்டும் நேருக்கு நேர் மோதிய இந்த விபத்து நடு சாலையில் நெருப்பு கோளத்தை ஏற்படுத்தியுள்ளது.

மிகவும் ஆபத்தான பகுதி
தகவலை அறிந்து விரைந்துவந்த பொலிசார் மற்றும் மருத்துவ உதவிக்குழுவினர், பிரதான சாலை ஊழியர்கள் என இணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, விவாரோ வாகனத்தை செலுத்திய 54 வயது சாரதி கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் விசாரணைக்கு உதவுமாறு அதிகாரிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அப்பகுதி குடியிருப்பாளர்கள் தெரிவிக்கையில், அந்த சாலையானது மிகவும் ஆபத்தான பகுதி என்றும், பொலிஸ் கண்காணிப்பும் மிகவும் குறைவு என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *