கனேடிய லொட்டரியில் பெருந்தொகை வென்ற ஒரே நிறுவனத்தில் பணியாற்றும் 12 ஊழியர்கள்
ரொறன்ரோவில் கிடங்கு ஒன்றில் பணியாற்றும் 12 ஊழியர்கள் லொட்டரியில் பெருந்தொகை வென்றுள்ளனர்.
மொத்தம் 247,558.90 கனேடிய டொலர்
கடந்த 2020 முதல் அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஐவர் குழு ஒன்று வாராந்தம் லொட்டரியில் தங்கள் அதிர்ஷ்டத்தை சோதித்து வந்துள்ளது. இவர்களுடன் பின்னர் மேலும் 7 பேர்கள் இணைந்துள்ளனர்.
ஆனால் ஜனவரி 12ம் திகதி அதிர்ஷ்டம் இவர்களைத் தேடி வந்துள்ளது. இரண்டாவது பரிசாக மொத்தம் 247,558.90 கனேடிய டொலர் பரிசாக வென்றுள்ளனர். இந்த 12 பேர்களும் ஆளுக்கு 20,630 கனேடிய டொலர் பரிசாக பெற உள்ளனர்.
Galceran என்பவரே இந்த குழுவுக்கு தலைவராக உள்ளார். அவரே சீட்டு வாங்கியதுடன், பரிசு தொடர்பில் டிக்கெட்டை சரிபார்த்துள்ளார். உண்மையில் தமக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது என Galceran தெரிவித்துள்ளார்.
உடனடியாக குழு உறுப்பினர்களுக்கு அந்த தகவலை தெரியப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தலா 20,630 டொலர் பங்காக பெற உள்ளனர். மேலும் இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் பொருட்டு, 12 பேர்களும் குடும்பத்துடன் இரவு விருந்துக்கும் திட்டமிட்டுள்ளனர்.