சமையலில் கலக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் யார்…? இவருடைய சொத்து மதிப்பு
மாதம்பட்டி ரங்கராஜ் என்பவர் நடிகர் மட்டுமல்லாமல் ஒரு பிரபலமான சமையல்காரராகவும் இருக்கிறார்.
ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 400 திருமணங்களுக்கு பிரமாண்டமான விருந்துகளை தயார் செய்து வருகிறார்.
யார் இந்த மாதம்பட்டி ரங்கராஜ்
1983 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் பகுதியில் பிறந்த இவருக்கு தற்போது 41 வயதாகிறது.
இவருடைய தந்தை தங்கவேலும் ஒரு பிரபலமான சமையக்காரர். இவருடைய சமையலை மறைந்த சிவாஜியும் ருசித்துள்ளார். அதை பார்த்தே வளர்ந்து வந்த ரங்கராஜ் தனது கலையை சமையலில்காட்ட ஆரம்பித்தார்.
சமையல் தொழிலும் இப்படிப்பட்ட புதுமைகளை புகுத்த முடியுமா என்று ஆச்சரியப்பட வைத்த ஒருவர் தான் கோவையை சேர்ந்த மாதம்பட்டி ரங்கராஜ்.
மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக திரையுலகிற்கு அறிமுகமாகியவர் தான் இந்த மாதம்பட்டி ரங்கராஜ்.
இவர் தனது தந்தையிடன் சமையல் கலையைப் பெற்றுக்கொண்டு தற்போது பல பிரபலங்களுக்கும் சமைத்துக்கொண்டு வருகிறார்.
இவர் சமைத்த உணவை சாப்பிடாத பிரபலங்களே இருக்க முடியாது என்றளவிற்கு இவர் சமைக்கிறார்.
கடந்த ஆண்டில் மத்திய இணை அமைச்சரான எல்.முருகன் டெல்லியில் புத்தாண்டு விழாவின் மூலம் தென்னிந்திய உணவுகளை சமைத்தார்.
அதற்கு வருகைதந்திருந்த பிரதமர் நரேந்திர மோடியும் இவருடைய உணவை ருசித்துள்ளார்.
அதேபோல் தமிழ்நாட்டிலும் முதலமைச்சர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, முன்னணி நடிகர், நடிகைகள் என பலரும் மாதம்பட்டி உணவை ருசி பார்த்துள்ளனர்.
இவர் எங்கு சென்று சமைத்தாலும் சரி, கோவையிலிருந்தே சிறுவாணி தண்ணீரை நிரப்பி 2 லாரியில் கொண்டு செல்வாராம். இவருடைய உணவிற்கு சுவையாக இருப்பது அந்த தண்ணீர் என்றே நம்புகிறார்.
இவர் தனது சிறு வயதில் இருந்து தனது தந்தையுடன் சமைக்கு இடங்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இதன் மூலமே இதில் அதிக ஈர்ப்பும் வந்துள்ளது எனலாம்.
எங்கு சமைக்க சென்றாலும் தனது தந்தையை பார்த்து, ”சமையல்காரன் வந்துட்டானா” என்று தான் கேட்பார்கள்.
அதன் காரணமாகவே தான் சமையல் தொழிலையும் கார்ப்பரேட் அளவுக்கு கொண்டு சென்றுள்ளேன் என ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார்.
சொத்து மதிப்பு
மாதம்பட்டி ரங்கராஜின் நிகர மதிப்பு சுமார் 4 மில்லியன் டாலர்கள் ஆகும். பிரபல சமையல் கலைஞரான இவர், தமிழகத்தில் மிகப்பெரிய சமையல் தொழிலை செய்து வருகிறார்.
அவர் தனது நிறுவனத்தில் 1000-க்கும் மேற்பட்டவர்களை வேலைக்கு வைத்து பிரமாண்டமாக சம்பாதித்தும் வருகிறார்.
இவருக்கு சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் பல சொத்துக்கள் உள்ளன. அவரிடம் சொகுசு வாகனங்களும் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.