30 வயதில் வேலையை விட்டுவிட்டு… பல கோடிகள் வருவாய் ஈட்டும் நிறுவனத்தை உருவாக்கி சதித்த பெண்
சொந்தமாக தொழில் தொடங்குவது என்பது நிச்சயமாக சவாலான பணிதான். பலர் தங்கள் பெருந்தொகை ஊதியத்தை விட்டுவிட்டு சொந்தமாக தொழில் தொடங்கி, சாதிக்கவும் செய்கிறார்கள்.
சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும்
அப்படி சாதித்தவர்களில் ஒருவர் தான் Ahana Gautam. தனது 30 வயதில் தான் அஹானா கௌதம் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார்.
அமெரிக்காவில் பெருந்தொகை ஊதியத்தில் வேலைக்கு இருந்தவர், அதை விட்டுவிட்டு இந்தியா திரும்பினார். Open Secret என்ற நொறுக்குத் தீனி நிறுவனம் ஒன்றை துவங்கினார்.
தற்போது இந்த நிறுவனத்தின் ஆண்டு வருவாய் என்பது ரூ 100 கோடி என்றே கூறப்படுகிறது. தொழில் தொடங்க வேண்டும் என்ற தமது விருப்பத்தை நிறைவேற்ற தமது தாயாரே முதலீடு அளிக்க முன்வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆரோக்கியமான நொறுக்குத் தீனிகள்
ஐஐடி பாம்பேயில் கெமிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்ற அஹானா, 2014-2016ல் ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் எம்பிஏ படித்தார். ராஜஸ்தான் மாகாணத்தை சேர்ந்த அஹானா 2019ல் Open Secret என்ற நொறுக்குத் தீனி நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
தமது நிறுவனத்தின் மூலமாக ஆரோக்கியமான நொறுக்குத் தீனிகள் மட்டுமே விநியோகிக்கப்படும் என அஹானா திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.