புதிய மாடல் பைக்கை அறிமுகம் செய்த Hero நிறுவனம்.., விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்கள்
நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த புதிய மாடல் பைக்கை Hero நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
Hero Mavrick 440
Hero நிறுவனம் புதிய மாடலான Hero Mavrick 440 என்ற பைக்கை தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கானது உலக சந்தையில் இருந்தாலும் இந்தியாவில் இப்போது தான் அறிமுகம் செய்துள்ளது. இது Hero World 2024 நிகழ்வில் காட்சியப்படுத்தப்பட்டது.
Hero Mavrick 440 பைக் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. அதாவது, Hero Mavrick 440 பைக் Base மாடல், Mid மாடல் மற்றும் Top Variant மாடல் என மூண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. மேலும் விலையானது ரூ.1.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
நீங்கள் இந்த பைக்கை வாங்க நினைத்தால் Hero நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு சென்று ரூ.5000 டெபாசிட் கொடுத்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.
அதுவும் மார்ச் 15 -ம் திகதிக்கு முன் முன்பதிவு செய்தால் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கையுறை போன்ற பைக் கிட் இலவசமாக வழங்கப்படும். ஏப்ரல் 15 -ம் திகதி பைக் டெலிவரி செய்யப்படும்.
விலை எவ்வளவு?
வெள்ளை நிறத்தில் வரும் Hero Mavrick 440 பைக் Base மாடல் விலை ரூ. 1 லட்சத்து 99 ஆயிரம் ஆகும். மேலும், சிவப்பு மற்றும் நீல நிறத்தில் வரும் Mid மாடல் விலை ரூ.2 லட்சத்து 14 ஆயிரம் ஆகும். கருப்பு நிறத்தில் வரும் Top Variant விலை ரூ.2 லட்சத்து 24 ஆயிரம் ஆகும்.
சிறப்பம்சங்கள்
இந்த பைக்கில் 440cc Single-cylinder, Air-oil cooled engine, Six Gear Box ஆகிய அம்சங்கள் உள்ளது. மேலும் 6,000RMP ல் 27php பவரையும், 4000RPM -ல் 36Nm டார்க் திறனையும் வழங்கும்.
குறிப்பாக இந்த ஹீரோ மாடல் பைக்கிற்கு Java 350, Honda CB350, Royal Enfield Bullet 350 ஆகியவை கடும் போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.