இனி விசா மாஸ்டர் கார்டு மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு ரிசர்வ் வங்கி தடை..!
பேடிஎம் பேமெண்ட் வங்கிக்கு எதிராக ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது புதிதாக மற்றொரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதாவது, விசா, மாஸ்டர் கார்டு நெட்வொர்க்குக்குகள் மற்றும் சில சிறிய நிறுவனங்களால் செயல்படும் கார்டுகளுக்கு வணிகப் பணம் செலுத்துவதை நிறுத்துமாறு ரிசர்வ் வங்கி அதிரடியாக அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் புதிய உத்தரவில், விசா மற்றும் மாஸ்டர்கார்டு நெட்வொர்க்குகள் சிறு நிறுவனங்களால் செய்யப்படும் கார்டு அடிப்படையிலான பணப் பரிவர்த்தனைகளை நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மற்ற வணிக விற்பனை நிலையங்களில் செய்யப்படும் பரிவர்த்தனைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. ஏன் இந்த நடவடிக்கையை ரிசர்வ் வங்கி எடுத்தது என்பது தொடர்பான சரியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்ததன் பின்னணியில், கேஒய்சி விதிமுறைகளைப் பின்பற்றாத சிறு வணிகர்கள் செய்யும் பரிவர்த்தனைகள் குறித்து ரிசர்வ் வங்கி கவலைப்படுவதே காரணம் என்று கூறப்படுகிறது. எனினும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
ஃபிண்டெக் நிறுவனங்கள் வணிக அட்டைகள் மூலம் செய்யப்படும் வணிகக் கட்டணங்களை மறு உத்தரவு வரும் வரை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.