Daily Rasi Palan | இன்றைய ராசி பலன் – பிப்ரவரி 16, 2024 – வெள்ளிக்கிழமை
மேஷம்:
வணிகர்கள் தங்கள் வியாபாரத்தில் அதீத ஆர்வத்தைத் தவிர்க்க வேண்டும். இன்று யாருக்கும் கடன் கொடுக்கவோ அல்லது யாரிடமும் கடன் வாங்கவோ வேண்டாம். பெரியவர்களை அனுசரித்து செல்லுங்கள். முக்கிய முடிவுகளை எடுக்கும் போது புத்திசாலித்தனமாக செயல்படுங்கள். தேவையற்ற விவாதம் மற்றும் சர்ச்சையைத் தவிர்க்கவும்.
ரிஷபம்:
உங்களின் வளர்ச்சிக்கு உதவும் பொருளாதாரப் பணிகளை முன்னெடுத்துச் செல்வீர்கள். தொழிலதிபர்களுக்கு அவர்களின் தொழிலில் லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் உங்களின் பணி வேகம் சிறப்பாக இருக்கும். மூத்த அதிகாரிகளிடம் பாராட்டுகளை பெறுவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். ஆக்கப்பூர்வமான செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும்.
மிதுனம்:
அத்தியாவசியத்திற்காக இன்று அதிகம் செலவு செய்ய நேரிடும். புதிதாக கட்டிடம், வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில் வியாபாரம் சீராக இருக்கும். பெரிதாக யோசித்த விஷயத்தை இன்று செயல்படுத்த வாய்ப்புகள் அமையும்.
கடகம்:
எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். பணத்தை பாதுகாப்பதில் இன்று கவனம் செலுத்துங்கள். செல்வம் பெருகும். கடன் வாங்குவதைத் தவிர்க்கவும் இல்லையெனில் திருப்பி கொடுப்பது கடினமாகிவிடும். உங்களுக்கு பின்னால் நடக்கும் சதி தொடர்பான முக்கிய தகவல்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு வணிகத்தில் லாபம் அதிகரிக்கும்.
சிம்மம்:
உங்கள் திறமையின் அடிப்படையில் பொருளாதார நிலையை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இன்று செய்யும் புதிய முதலீடு நஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதால் எச்சரிக்கை தேவை. பண பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்கவும்.
கன்னி:
வணிகர்கள் தாங்கள் எடுக்கும் முயற்சிகள் மூலம் லாபத்தை பேணுவார்கள். ரிஸ்க்கான செயல்களில் ஆர்வம் காட்டாதீர்கள். பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் நஷ்டம் ஏற்படும். உங்களின் திறன் பலம் பெறும். இன்று எதை கண்டும் நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை, தைரியமாக செயல்பட வேண்டிய நாள்.
துலாம்:
பொருளாதார நிலை இன்று சாதாரணமாக இருக்கும். எதிலும் பொறுமையுடன் செயல்பட வேண்டும். முக்கிய முடிவுகளை எடுக்கும் போது சுறுசுறுப்பும், தெளிவும் இருக்க வேண்டும். வியாபாரிகள் தங்கள் வணிகத்தில் கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். நிலுவையில் உள்ள பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
விருச்சிகம்:
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இன்று வாழக்கை தரத்தை உயர்த்தும் அற்புத வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் அதிக நேரம் செலவிடுவீர்கள். பொருளாதார நடவடிக்கைகள் பலம் பெறும். முக்கிய வேலைகளை தள்ளிப் போடுவதை தவிர்க்க வேண்டும்.
தனுசு:
உங்களது பொருளாதார நிலை இன்று உயரும், வணிகர்களுக்கு லாபம் அதிகரிக்கும். உங்களது மதிப்பும், செல்வாக்கும் உயரும். எடுத்த செயல்களை முடித்தே தீருவது என்ற நம்பிக்கை அதிகமாக இருக்கும். உங்களின் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். உங்களுக்கு ஏற்ற சாதகமான சூழலால் உற்சாகமாக இருப்பீர்கள்.
மகரம்:
பணியிடத்தில் ஊழியர்களுக்கும், வியாபாரத்தில் வணிகர்களுக்கும் இன்று விரும்பிய முடிவுகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்த தடைகள் தானாக விலகும். புதிய தொடர்புகளால் ஆதாயம் கிடைக்கும். உங்களது நீண்ட கால திட்டங்களை இன்று விரைவுபடுத்துங்கள், இதன் மூலம் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
கும்பம்:
தொழில் சார்ந்த விஷயங்களை நிலுவையில் வைத்திருப்பதைத் தவிர்க்கவும். உங்களின் வேலை வேகம் சிறப்பாக இருக்கும். நெருங்கியவர்களின் ஆலோசனையை ஏற்று செயல்படுவீர்கள். செலவுகளை பட்ஜெட்டிற்குள் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள். வணிகர்கள் வியாபாரத்தில் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
மீனம்:
இன்று நீங்கள் பொறுப்புடன் நடந்துகொள்வதன் மூலம், உங்கள் அலுவலக பணிகள், தொழில் மற்றும் வியாபாரத்தை மேம்படுத்த முடியும். வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும். கிடப்பில் போட்டிருந்த வேலைகள் இன்று வேகம் பெறும். சுறுசுறுப்பாக இருப்பதன் மூலம் உங்களின் செயல்திறன் அதிகரிக்கும்.