வேதனையுடன் ட்வீட் போட்ட வைரமுத்து..!

சினிமாவை தியேட்டர்களுக்கு சென்று படம் பார்க்கும் மக்களின் கூட்டம் குறைந்து வருகிறது. மேலும், ஸ்மார்ட் போன்களின் ஆதிக்கத்தால், ஓடிடி வரவாலும், பலரும் வீட்டிலேயே திரைப்படங்களை பார்த்துவிட விரும்புகின்றனர்.இதனால், பல இடங்களிலும் தியேட்டர்களை மூடுவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், சென்னையில் கடந்த 1983இல் தொடங்கப்பட்ட உதயம் தியேட்டரை இடித்து விட்டு அங்கு குடியிருப்பு வளாகம் ஒன்று கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

“உதயம் தியேட்டருல என் இதயத்தை தொலைச்சேன்” என சினிமா பாடல்களில் இடம்பெறும் அளவிற்கு பிரபலமான உதயம் தியேட்டர் இடிக்கப்படுவது சினிமா ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், திரை பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து, உதயம் தியேட்டர் குறித்து எக்ஸ் தளத்தில் ஒரு கவிதை வெளியிட்டுள்ளார். அந்த கவிதை பின்வருமாறு:-

“ஒரு கலைக்கூடம் மூடப்படுகிறது. அதனால் இதயம் கீறிச்சிடுகிறது. முதல் மரியாதை,சிந்து பைரவி, பூவே பூச்சூடவா, புன்னகை மன்னன்,ரோஜா என்று நான் பாட்டு எழுதிய வெற்றி படங்களை திரையிட்ட உதயம் திரைவளாகம் கண்டு என் கண்கள் கலை கண்ணீர் வடிக்கின்றன. இனிய அந்த கால தடயத்தை கடக்கும்போதெல்லாம் வாழ்ந்த வீட்டை விட்டவனின் பரம்பரை கவலையோடு என் கார் நகரும். நன்றி உதயம்” என்று சோகமான பதிவினை வெளியிட்டுள்ளார்.

உதயம் திரையரங்கம் குறித்து வைரமுத்து வெளியிட்ட இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *