வைரலாகும் எம்.பி கனிமொழியின் ட்வீட் : வடக்கு வாழ்கிறது… தெற்கு தேய்கிறது..!

கனிமொழி எம்.பி கூறியதாவது, திமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுவதால்தான் திமுக தேர்தல் அறிக்கையை முழுமையாக நிறைவேற்றுவதற்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் குறைந்த அளவே மத்திய அரசு நிதி ஒதுக்குவதால் ரயில்வே துறையில் கூட திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை என கூறினார்.

இதேபோல் அமைச்சர் தங்கம் தென்னரசு, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, விசிக தலைவர் திருமாவளாவன், மதிமுக தலைவர் வைகோ உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மத்திய அரசு மீது இதே குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

இதற்கிடையே நிதி பங்கீடு குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும் போது, “தமிழ்நாட்டுக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு எதுவுமே செய்வது இல்லை சொல்கின்றனர்.நாங்கள் வழங்கும் வரியைதான் கோருகிறோம், என கூறுபவர்களுக்கு சிலவற்றை சொல்ல விரும்புகிறேன். மாநில அரசுகள் வழங்கும் வரியில் இருந்து பெறப்படும் தொகையைதான் மத்திய அரசு பங்கிட்டு வழங்குகிறது. வந்தே பாரத் ரயில் தயாரிப்பு தமிழகத்திற்கு கொடுத்தது, ரூ.1,260 கோடி ரூபாயில் சென்னையில் புதிய விமான முனையம், மெட்ரோ ரயில், உள்ளிட்ட திட்டங்களை தாங்கள் செயல்படுத்தி வருகிறோம் என தெரிவித்தார்.

இந்நிலையில் திமுக எம்பி கனிமொழி அவரது எக்ஸ் தள பக்கத்தில், தமிழக அரசு கொடுக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும், வெறும் 29 பைசாவை மட்டுமே மத்திய அரசு தருவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் புகழ்பெற்ற கருத்தான ” வடக்கு வாழ்கிறது..தெற்கு தேய்கிறது” என்பதை சுட்டிக்காட்டி பதிவிட்டுள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *