ரதசப்தமி வழிபாட்டை எப்படி மேற்கொள்வது?
ரத சப்தமி என்பது சூரிய பகவானுக்கு உரிய நாள். ஏழேழு ஜென்மத்தில் நம்மை பின் தொடரும் பாவத்தை தீர்க்க ரதசப்தமி வழிபாட்டை எப்படி மேற்கொள்வது?
இந்த வருட ரத்த சப்தமியானது பிப்ரவரி 16ஆம் தேதி வந்து இருக்கின்றது. வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் அதிகாலை வேலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளிக்க வேண்டும். குளிக்கும்போது முக்கியமாக இதை நீங்கள் பின்பற்றனும். முந்தைய நாளே, ஏழு எருக்கன் இலைகளைக் கொண்டு வந்து வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தனியான 7 எருக்கன் இலைகள் தேவை. ஒருவருடைய தலையின் மீது 7 எருக்கன் இலைகளை வைத்து தலையில் தண்ணீரை ஊற்றி குளிக்க வேண்டும். அவ்வளவுதான் அந்த 7 இருக்கன் இலைகளை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விடவும். மீண்டும் இன்னொருவருக்கு புதுசாக 7 எருக்கன் இலைகளை எடுத்து பயன்படுத்தவும்.
சூரிய பகவான் அனுகிரகம் பெற்ற செடி இந்த எருக்கன் செடி. குளித்துப் பிடித்த பின்பு, பூஜை அறையை அலங்காரம் செய்து கொள்ளுங்கள். பெரும்பாலும் நாம் எல்லோரும் வீட்டிலும் சூரிய பகவானின் திருவுருவப்படம் இருக்காது. சில பேர் வீடுகளில் ஏழு குதிரை பூட்டிய சூரிய பகவானின் திரு உருவப்படம் இருக்கும். ஏழு குதிரைகளின் மீது வளம் வரும், சூரிய பகவான். சப்தமி என்பது ஏழைக் குறிக்கின்றது. சூரிய பகவானை நினைத்து பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு சர்க்கரை பொங்கல், வடை நிவேதனையுமாக வைத்துவிட்டு, பச்சை வாழைப்பழம் கிடைத்தால் இன்று நெய்வேதியம் வையுங்க. ரொம்ப ரொம்ப நல்லது. சூரிய பகவானையும் பெருமாளையும் மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
பிறகு கற்பூர ஆரத்தி காண்பித்து இந்த பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். பூஜை நேரத்தின் போது உங்கள் குடும்பத்தில் இருக்கும் கஷ்டங்கள் நீங்க, செய்த பாவங்களுக்கு விமோசனம் கிடைக்க வேண்டும் என்றும் வேண்டுதலை சூரிய பகவானிடம் வையுங்கள். வேலை இல்லாமல் வருமானம் இல்லாமல் கஷ்டப்படுபவர்கள், நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்து கொள்ளலாம்.
இந்த ரதசப்தமி அன்று வீட்டில் இருந்தபடியே பெருமாளையும் மனதில் நினைத்து வழிபாடு செய்யுங்கள். திருப்பதி பெருமாளை வழிபட்ட பலனை பெறலாம்.