ராஜ வாழ்க்கை… தனுஷ் பட நடிகையின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?
தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தாலும், சிவகார்த்திகேயன், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து முன்னணி நடிகையாக மாறிவிட்டார் பிரியங்கா மோகன்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான டாக்டர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியங்கா அருள் மோகன்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்தார், தொடர்ந்து அடுத்த ஆண்டே டான் படத்தில் இணைந்தனர்.
அடுத்ததாக சூர்யாவுடன் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்தார், கன்னட படங்களில் அறிமுகம் ஆனாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபல்யமானார் பிரியங்கா மோகன்.
இதனாலேயே அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி வருகிறார்.
தனுஷ்டன் கேப்டன் மில்லர் படத்தில் அதிரடி நாயகியாக களமிறங்கினார், இதனால் இவரது சம்பளத்தையும் உயர்த்தி கோடிகளில் வாங்குகிறாராம்.
80 லட்சத்தில் இருந்த சம்பளம், கேப்டன் மில்லர் படத்தில் 1 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாம்.
இதற்கிடையே இவரது சொத்துமதிப்பு, இந்திய மதிப்பின் படி ரூ. 17 கோடி என கூறப்படுகிறது.
தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார், தமிழில் ஜெயம் ரவியுடன் ஜோடி சேர்கிறார் பிரியங்கா மோகன்.