மதுவை விட அதிகமாக கல்லீரலை பாதிக்கும் உணவுகள்… என்னென்ன தெரியுமா?
கல்லீரல் நமது உடலின் ஒரு முக்கிய அங்கமாகும். இது நம் உடலில் பல விஷயங்களைச் செய்கிறது. அதனால்தான் கல்லீரல் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் முக்கியம். நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கு தேவையான உணவை ஜீரணிக்க கல்லீரல் உதவுகிறது.
அத்தகைய கல்லீரலை பாதிக்கும் உணவுகளை தவிர்த்தால், உங்களின் ஆரோக்கியம் மேம்படும். சில உணவுகள் மனித கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும்.
அதனால்தான் அவற்றைத் தவிர்க்க வேண்டும் என வைத்தியர்களால் அறிவுறுத்தப்படுகின்றது. இவ்வாறு கல்லீரலை பாதிக்கும் உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வெண்ணெய்
பொதுவாகவே வெண்ணெயில் அதிக அளவு கொழுப்பு நிறைந்துள்ளது. கல்லீரல் இந்த கொழுப்பை வடிகட்ட அதிகமாக வேலை செய்கின்றது. இதனால் கல்லீரல் விரைவில் சோர்வடையும் போது அது கல்லீரலின் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும்.
இனிப்புகள்
இனிப்பு உணவுகளை உடைக்க கல்லீரல் கடினமாக வேலை செய்யும். இனிப்பு உணவுகளை அதினமாக சாப்பிடுவது கல்லீரல் பாதிப்பு மற்றும் உடல் எடை அதிகரித்தல் போன்ற பிரச்சினைகளை தோற்றுவிக்கும்.
கல்லீரல் ஆரோக்கியத்ததை பாதுகாக்க இனிப்பு உணவுகளை குறைத்துக்கொள்ள வேண்டியது மினவும் அவசியம்.
பிரெஞ்சு பொரியல்
பொதுவாகவே கொழுப்பு நிறைந்த உணவுகள் கல்லீரலை வலுவாக பாதிக்கும். குறிப்பாக பிரெஞ்ச் பொரியல்களை தொடர்ந்து சாப்பிட்டால் கல்லீரலில் கொழுப்பு சேர ஆரம்பித்து வீக்கத்தை ஏற்படுத்தும்.
இது நாளடைவில் பாரிய கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் இந்த உணவுகளை முற்றாக தவிர்ப்பது கல்லீரல் ஆரோக்கியத்துக்கு மிகவும் இன்றியமையாதது.
பெப்பரோனி பெப்பரோனி போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் கொழுப்பு நிறைந்து காணப்படும்.இதனை தினமும் சாப்பிடுவது கல்லீரலுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்.