இது தெரியுமா ? தினமும் காலையில் காபி குடிப்பதற்கு பதிலாக சீரகத் தண்ணீரைக் குடித்து வந்தால்…
சீரகம் = சீர் + அகம் என்று பிரித்து பொருள் கூறுவார்கள். இது தனது பெயருக்கு ஏற்றாற்போல், நம் உடலின் உள்ளுறுப்புகளில் ஏற்படும் நோய்களை எல்லாம் அகற்றி, நம் உடலை சீராக்குகிறது.எனவே தான் நம் முன்னோர்கள் சீரகம் போல் சிரிக்கிறாள் என்றும் சிறுகுழந்தைகள் சிரிப்பைக்கூட சீரகத்தோடுஒப்பிட்டு கூறினார்கள்.
சீரகத்தில் உள்ள சத்துக்கள்
நாம் தினந்தோறும் பயன்படுத்தும் சீரகத்தில் பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன. இதில் இரும்பு சத்து, புரதம், நார்சத்து, பொட்டாசிம், செலினியம், வைட்டமின் பி மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை அடங்கியுள்ளன.சீரகத்தில் கணக்கில் அடங்காத பல்வேறு மருத்துவக்குணங்கள் உள்ளன. தினந்தோறும் சீரகத்தை பயன்படுத்தும் போது, உடலானது ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் மாறும்.
தூக்கம் வரவழைக்கும் சீரகம்
நமது எண்ணஙகள் சீராகவும், நம் கவலைகள் தீரவும், சீரகத்தை வறுத்துப்பொடித்து வாழைப்பழத்தில் தொட்டு சாப்பிட நல்ல தூக்கம் வரும். சீரகத்தை தூளாக்கி, மெல்லிய துணியில் இறுக கட்டி முகர்ந்தாலும், உடனே தூக்கம் வரும்
கூந்தல் வளர்ப்பில் சீரகம்
இன்று நாம் கூந்தலை பராமரிக்க, கலப்படம் நிறைந்த பொருட்களை அதிகம் பயன்படுத்தி வருகிறோம்.ஆனால், நம் முன்னோர்கள் சீரகத்தை சீரகத்தை நன்கு கருமை நிறமாக வறுத்துப் பொடித்து அதனுடன் பால் கலந்து தலைக்கு தேய்த்து, அரைமணி நேரம் கழித்து குளித்து வந்தால் தலை முடி அடர் மாநிறமாகும்.அதையே தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், தலை முடி கருமை நிறமாக மாறிவிடும். சீரகத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள், கூந்தலை வலுவாக்கி முடியின் வேர்கள் வளர்வதற்கும், முடி உதிர்தலை தடுப்பதற்கும் உதவுகிறது.
கல்லீரலுக்கு உதவும் சீரகம்
சீரகப்பொடி கால் தேக்கரண்டி, புதினா இலைச்சாறு இரண்டு தேக்கரண்டி, எலுமிச்சை சாறு பத்து சொட்டு, உப்பு சிறிது சேர்த்து, நீரில் கலந்து உணவுக்குப் பின் குடித்து வந்தால் கல்லீரல் நோய் குணமாகும்.
எடையை குறைக்க உதவும் சீரகம்
இரவு முழுவதும் சீரகத்தை ஊறவைத்து, அதனை காலையில் கொதிக்க வைத்து, பின்னர், அந்த நீரை வடிகட்டி, அதில் ஒரு எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரங்களுக்கு, தினமும் காலையில் குடித்து வர விரைவில் எடை குறைவதைக் காணலாம்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள்
சீரகம் அரை தேக்கரண்டி, வேப்பம் பூ ஒரு தேக்கரண்டி மற்றும் சிறிதளவு மிளகுப்பொடி சேர்த்து கொதிக்கவைத்து, அந்த நீரை வடிக்கட்டி தேன் கலந்து பருக, சர்க்கரை நோயால் ஏற்படும் கால் எரிச்சல், நரம்பு பாதிப்பு தீரும்.
வயிற்றுப்புண் அகற்றும் சீரகம்
சீரகப்பொடி அரை ஸ்பூன் சேர்த்து, இஞ்சி சாறு சிறிதுடன் கொதிக்க வைத்து வடிகட்டி, அதனுடன் தேன் கலந்து 25 மில்லி அல்லது 50 மில்லி குடிக்க, வயிற்றுப்புண், அல்சர், செரிமானமின்மை, பசியின்மையை போக்கும்.
தலைவலி தீர்க்கும் சீரகம்
ஒரு நெல்லி வற்றலை ஊறவைத்து, அரை தேக்கரண்டி சீரகத்தை தண்ணீரில் கொதிக்கவைத்து, பனம் கற்கண்டு சேர்த்து கொதிக்கவைத்து 48 நாட்களுக்கு ஒருவேளை குடித்து வர, அடிக்கடி வரும் தலைவலி நீங்கும்.
சீரகத்தை வேறு சில உணவுடன் கலந்து சாப்பிட்டால் நன்மை கிடைக்கும்
* தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.
* சீரகப் பொடியை நீரில் சேர்த்து தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.
* தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வந்தால் உடல் எடையைக் குறையும்.
சீரக தண்ணீரின் நன்மைகள்
தண்ணீரில் சிறிது சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வயிற்றுக்கு மிகவும் நல்லது.
சீரகத்தண்ணீர் குடிப்பதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைகிறது. இத்தண்ணீரில் பொட்டாசியம் அதிகளவு இருப்பதால் இரத்த அழுத்தம் சீராகும்.
தினமும் காலையில் காபி குடிப்பதற்கு பதிலாக, சீரகத் தண்ணீரைக் குடித்து வந்தால், மூளை நன்கு சுறுசுறுப்புடனும், புத்துணர்ச்சியுடனும் செயல்படும்.
சளி பிரச்சனை இருந்தால், அப்போது வெறும் சுடுநீரைக் குடிக்காமல், நீரில் சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால், சுவாசக் குழாயில் உள்ள நோய்க்கிருமிகள் அழிக்கப்பட்டு, சளி, இருமலில் இருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நினைத்தால், வெறும் நீரைக் குடிக்காமல், சீரக நீரைத் தொடர்ச்சியாக குடித்து வாருங்கள். இதனால் உடலைத் தாக்கும் நோய்க்கிருமிகளிடமிருந்து நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.
இரும்பு சத்து குறைபாட்டையும் சீரக நீர் சீர் செய்யும். மாதவிடாய் காலத்தில் வலி நிவாரணியாகவும் விளங்குகிறது. அந்த சமயத்தில் சீரக நீர் பருகுவதன் மூலம் வலி கட்டுப்படும். சரும பளபளப்புக்கும் சீரக நீரை பயன்படுத்தலாம். அதில் பொட்டாசியம் மட்டுமின்றி கால்சியம், செலினியம், மாங்கனீஸ் உள்ளிட்டவை இருக்கின்றன. அவை தோலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கிறது.
அதுமட்டுமல்லாமல், இதய வீக்கம் அடைப்புகளை தடுக்கும். இரத்தத்தில் உள்ள நச்சுக்களையும் வெளியேற்றி, இரத்தத்தை சுத்திகரிக்கும்.
சீரகத்தில் நார்ச்சத்து உள்ளது. எனவே மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள், சீரக நீரை வெறும் வயிற்றில் குடித்தால், சிறப்பான பலன் கிடைக்கும்.
சீரகத்தண்ணீர் குடிப்பதால், பித்தத்தை நீக்கி பித்தப்பைக்கு பாதுகாப்பு அளிக்கிறது. தினம் மூன்று வேளை கொதிக்க வாய்த்த, இந்த சீரகத்தண்ணீரை அருந்துவதால் உடலில் ஏற்படும் பலவீனம் நீங்குவது மட்டுமல்லாமல், பல்வேறு நோய்களையும் தீர்க்க வல்லது.
சீரகத்தண்ணீர் வாரம் ஒரு குடித்து வர மஞ்சள் காமாலை குணமாகும். மேலும், அகத்தை சீராக்கும் சீரகம், ஈரலையும் பலப்படுத்தும்.
சீரகம் மூளையின் செல்களைப் பாதுகாக்கும். சீரகப்பொடியுடன் நெய் மற்றும் வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்து, இலேகியம் செய்து மெலிந்த தேகம் உள்ளவர்கள் சாப்பிட்டு வர நன்கு சதை பிடிக்கும்.
சீரக நீருடன் மஞ்சள் தூளை கலந்து முகத்தை கழுவினால், முகம் பளபளக்கும். சருமம் மென்மையாக, மிருதுவாகவும் இருக்கும். சீரகத்தில் உள்ல வைட்டமின் ஈ சத்து இளமையை தக்கவைக்க உதவும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கூந்தலை வலுவாக்குவதோடு. முடியின்வேர்கள் வளர்வதற்கு உதவும். முடி உதிர்தலை தடுக்கும்.