ஒரே மாதத்தில் இத்தனை கார்களா..? SUV கார் விற்பனையில் முதலிடம் பிடித்த டாடா பஞ்ச்

இந்தியாவில் SUV கார்களின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறையில் SUV கார்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது. மாருதி பிரஸ்ஸா, டாடா நெக்ஸான், மஹிந்தரா ஸ்கார்பியோ போன்ற பிரபலமான SUV கார்கள் மக்களின் விருப்பத்திற்குரியதாக இருந்தாலும், தற்போது புதிய கார் ஒன்று மக்களிடம் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. காம்பேக்ட் SUV காரான டாடா பஞ்ச், 2024-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மற்ற கார்களை விட அதிகமாக விற்பனையாகி குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

2024 ஜனவரி மாத கார்களின் விற்பனை நிலவரம்:

2024-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் யாருமே எதிர்பார்க்காத வகையில் பிரபலமான நெக்ஸான், பிரெஸ்ஸா, ஸ்கார்பியோ கார்களை விட அதிகமாக விற்பனையாகி இந்திய மார்க்கெட்டில் முதலிடத்தைப் பிடித்துள்ளது டாடா பஞ்ச். ஜனவரி மாதத்தில் மட்டுமே 17,978 டாடா பஞ்ச் கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தைக் காட்டிலும் இது 50 சதவிகிதம் அதிகமாகும். 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 12,006 டாடா பஞ்ச் கார்கள் விற்பனையாகியிருந்தன.

2024 ஜனவரியில் அதிகம் விற்பனையான 5 SUV கார்கள் :

டாடா பஞ்ச் – 17,978 கார்கள்
டாடா நெக்ஸான் – 17,182 கார்கள்
மாருதி சுசுகி பிரெஸ்ஸா – 15,303 கார்கள்
மஹிந்தரா ஸ்கார்பியோ – 14,293 கார்கள்
மாருதி சுசுகி ஃப்ரான்ஸ் – 13,643 கார்கள்

இந்தியாவில் SUV கார்களுக்கான சந்தை எந்தளவிற்கு போட்டி நிறைந்ததாக இருக்கிறது என்பதை இந்தப் பட்டியல் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இதில் முதல் இரண்டு இடங்களையும் டாடா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. பிரெஸ்ஸா, ஸ்கார்பியோ போன்ற மற்ற கார்களின் விற்பனை எண்ணிக்கையும் நன்றாகவே உள்ளது. இதன் மூலம் SUV கார்களை விரும்பும் இந்திய வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட நிறுவனங்கள் மட்டுமே நம்பியிருக்கவில்லை என்பது தெரிகிறது.

டாடா பஞ்ச் சிறப்பம்சங்கள் :

டாடா பஞ்ச் கார் அறிமுகமான புதிதில் ஆரம்ப விலையாக ரூ.6 லட்சம் இருந்தது. சமீபத்தில் டாடா நிறுவனம் தங்களது கார்களின் விலையை அதிகரித்துள்ள நிலையில் டாடா பஞ்ச் கார் ரூ.6.13 லட்சம் முதல் ரூ.10.20 லட்சம் வரை கிடைக்கிறது. 5 இருக்கைகள் கொண்ட டாடா பஞ்ச் கார் மற்ற SUV கார்களை விட விலை குறைவாக இருப்பதோடு 366 லிட்டர் பூட் வசதியைக் கொண்டுள்ளது. இதனால் உங்கள் பொருட்களை வைப்பதற்கு சௌகர்யமான இடம் கிடைக்கிறது.

இந்தக் காரின் கிரவுண்ட் க்ளியர்ன்ஸ் 187mm இருப்பதால், பல்வேறு நிலப்பகுதிகளிலும் இதை எளிதாக ஓட்டிச் செல்ல முடியும். 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்சினில் இயங்கும் டாடா பஞ்ச் காரில் CNG ஆப்ஷனும் உள்ளது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத, விலை குறைவான கார் வேண்டும் என விரும்புகிறவர்கள் CNG மாடலை தேர்வு செய்யலாம்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *