கூடுதல் அம்சத்துடன் ஹூண்டாய் i20 Sportz-ன் புதிய வேரியன்ட் அறிமுகம்… விலை எவ்வளவு தெரியுமா?
ஹூண்டாய் நிறுவனம் தனது i20 மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை கடந்த ஆண்டு (20223) செப்டம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருந்தது. இந்த நிலையில் நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் i20 Sportz (O) வேரியன்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8.73 லட்சமாக உள்ளது.
ஸ்போர்ட்ஸ் ட்ரிம் அடிப்படையிலான இந்த புதிய வேரியன்ட், மேனுவல் கியர்பாக்ஸுடன் கிடைக்கிறது. மேலும் இந்த வேரியன்ட் i20 Sportz-ஐ விட ரூ.35,000 கூடுதல் விலை கொண்டதாக இருக்கிறது. இந்த கூடுதல் பணத்திற்கு ஏற்ப தற்போது அப்கிரேட் செய்யப்பட்டு அறிமுகமாகி இருக்கும் i20 Sportz (O) வேரியன்ட்டானது ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஸ்டாண்டர்ட் i20 Sportz-உடன் ஒப்பிடும் போது, 3 புதிய அம்சங்கள் இந்த புதிய வேரியன்ட்டில் கிடைக்கின்றன. வயர்லெஸ் சார்ஜர், டோர் ஆர்ம்ரெஸ்ட்களில் லெதரெட் ஃபினிஷ் மற்றும் எலெக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட்டபிள் சன்ரூஃப் ஆகியவை இதில் அடங்கும்.
மேலும் புதிய i20 Sportz (O) சிங்கிள் மற்றும் டூயல்-டோன் கலர் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. இதன் டூயல்-டோன் வேரியன்ட் சற்று விலை உயர்ந்ததாக இருக்கிறது. இதன் டூயல்-டோன் கலர் ஆப்ஷனை ரூ.8.88 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் வாங்கலாம். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் i20 Sportz (O) ஆனது 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை கொண்டுள்ளது. இந்த எஞ்சின் 82hp பவர் மற்றும் 115Nm பீக் டார்க்கை உருவாக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. மேலும் இந்த எஞ்சின் 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது அறிமுகமாகி இருக்கும் புதிய Sportz (O) வேரியன்ட்டை தவிர ஹூண்டாயின் i20 மாடலானது Era, Magna, Sportz, Asta மற்றும் Asta (O) என 5 வேரியன்ட்ஸ்களில் கிடைக்கிறது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம். விலைகள் ரூ.7.04 லட்சம் முதல் ரூ.11.21 லட்சம் வரை செல்கிறது.
தென் கொரியாவை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய், 2024 ஜனவரி மாதத்தில் மொத்த விற்பனை எண்ணிக்கையில் சாதனை படைத்துள்ளது. நிறுவனம் 2023 ஜனவரியில் 50,106 யூனிட்ஸ்களை விற்றிருந்த நிலையில், இந்த எண்ணிக்கை 14% அதிகரித்து 2024 ஜனவரியில் 57,118 யூனிட்ஸ்களை விற்றுள்ளது.
நிறுவனம் சமீபத்தில் நிறுவனம் அறிமுகப்படுத்திய க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட எக்ஸ்டெர் காம்பாக்ட் எஸ்யூவி உள்ளிட்டவற்றுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுவதால் ஹூண்டாயின் பேஸஞ்சர் வெஹிகிள்களுக்கான தேவை வலுவாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் SUV செக்மென்ட்டில் நிறுவனம் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.