டெஸ்ட் சரித்திரத்திலேயே எந்த வீரரும் செய்யாத சாதனை.. நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் மெகா சாதனை

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பிரம்மாண்ட சாதனை ஒன்றை படைத்து இருக்கிறார் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன். உலகின் தலைசிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனான கேன் வில்லியம்சன் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தார்.

இது அவரது 32வது டெஸ்ட் போட்டி சதம் ஆகும். இதே டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து இருந்தார் கேன் வில்லியம்சன். தற்போது இரண்டாவது போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்து இருக்கிறார். இதன் மூலம், டெஸ்ட் வரலாற்றில் மிகக் குறைந்த இன்னிங்ஸில் 32 சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை செய்துள்ளார் கேன் வில்லியம்சன்.

முன்னதாக ஸ்டீவ் ஸ்மித் செய்த சாதனையை முறியடித்து கேன் வில்லியம்சன் தனது பெயரை வரலாற்றில் பதிவு செய்தார். அவர் 172 இன்னிங்ஸ்களில் 32 டெஸ்ட் சதம் அடித்து இருக்கிறார். ஸ்டீவ் ஸ்மித் 174 இன்னிங்ஸ்களில் 32 டெஸ்ட் சதம் அடித்து இருந்தார். அந்த சாதனையை முறியடித்து இருக்கிறார் கேன் வில்லியம்சன். அவர் தான் ஆடிய கடைசி 7 டெஸ்ட் போட்டிகளில் 7 சதம் அடித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மிகக் குறைந்த இன்னிங்ஸில் 32 டெஸ்ட் சதம் அடித்த வீரர்கள் –

கேன் வில்லியம்சன் – 172 இன்னிங்ஸ்

ஸ்டீவ் ஸ்மித் – 174 இன்னிங்ஸ்

ரிக்கி பாண்டிங் – 176 இன்னிங்ஸ்

சச்சின் டெண்டுல்கர் – 179 இன்னிங்ஸ்

யூனிஸ் கான் – 183 இன்னிங்ஸ்

கேன் வில்லியம்சன் சதத்தால் தென்னாப்பிரிக்கவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 242 ரன்களும், நியூசிலாந்து 211 ரன்களும் எடுத்தன. தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் சிறிய முன்னிலை பெற்ற போதும், இரண்டாவது இன்னிங்ஸில் 235 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேன் வில்லியம்சன் சதம் அடிக்கவே நியூசிலாந்து அணி 267 ரன்கள் வெற்றி இலக்கை எளிதாக எட்டியது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *