ரூ.2000 கோடி சொத்து, 3 திருமணம், 13 குழந்தைகள்.. யார் இந்த கத்தார் அமீர்..?
2022 ஆகஸ்ட்டில் அறிவிக்கப்படாத குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் கத்தார் அமீரின் உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை அதிகாலை அறிவித்தது. இது இந்தியாவின் ராஜதந்திரத்துக்கு கிடைத்த வெற்றி என அரசு கருதுகிறது. யார் இந்த அமீர்..?
கத்தாரின் ஆட்சியாளர் அமீர் ஆவார். கத்தார் நாடு உருவானது முதல் 11 அமீர்கள் பதவி வகித்துள்ளனர். அனைவரும் அல்-தானி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானிக்கு 2013 ஆம் ஆண்டு பட்டம் வழங்கப்பட்டது. அவரது மூத்த சகோதரர் ஷேக் ஜாசிம் அரியணைக்கு உரிமை கோரினாலும், அவருக்குக் கிடைக்கவில்லை. அதன் பிறகு ஷேக் தமீமுக்கு இந்தப் பொறுப்பு கிடைத்தது.
1980 ஆம் ஆண்டு ஜுன் 3 ஆம் தேதியன்று ஷேக் தமீம் பிறந்தார். இவர் முன்னாள் அமீர் ஹமத் பின் கலீஃபா அல் தானியின் நான்காவது மகன் ஆவார். தனது ஆரம்பக் கல்வியை லண்டனில் உள்ள புகழ்பெற்ற ஹாரோ பள்ளியில் முடித்தார்.
பின்னர், அவர் இங்கிலாந்தில் உள்ள ராயல் மிலிட்டரி அகாடமியில் சேர்ந்தார். 1998 இல் அங்கு பட்டம் பெற்றார். இங்கிலாந்திலிருந்து திரும்பிய பிறகு, ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி கத்தார் ராணுவத்தில் இரண்டாவது லெப்டினன்ட் ஆனார்.
உலக பணக்கார மன்னர்கள் பட்டியலில் கத்தாரின் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்தானி ஒன்பதாவது இடத்தில் உள்ளார். அல் தானி குடும்பத்தின் மொத்த சொத்து சுமார் 335 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று கூறப்படுகிறது.
ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி 2005, 2009 மற்றும் 2014ல் மூன்று முறை திருமணம் செய்து 13 குழந்தைகளைப் பெற்றுள்ளார்.
தமீம் தனது குடும்பத்துடன் தோஹா ராயல் பேலஸில் வசிக்கிறார்.
1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இந்த அரண்மனை 100க்கும் மேற்பட்ட அறைகள், பால்ரூம்கள் போன்றவற்றைக் கொண்டுள்ளது.
கிட்டத்தட்ட 500 கார்களை ஒரே நேரத்தில் நிறுத்தலாம். தோஹா அரச அரண்மனையின் சில பகுதிகளில் தங்கச் சிற்பங்களும் உள்ளன.
ஷேக் தமீம் உலகின் மிக விலையுயர்ந்த மற்றும் ஆடம்பரமான படகுக்கு சொந்தமானவர்.
இந்த படகின் விலை 3.3 பில்லியன் ரூபாய்கள். இந்த படகு 124 மீட்டர் நீளம் கொண்டது. அதில் ஒரு ஹெலிபேடும் கொண்டுள்ளது. ஒரே நேரத்தில் 35 விருந்தினர்களும் 90 பணியாளர்களும் தங்கலாம்.
ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி தனக்கென ஒரு சொந்த விமான நிறுவனத்தை வைத்துள்ளார். அரச குடும்பத்துக்கு மட்டுமே சேவை செய்யும் ‘கத்தார் அமிரி ஏர்லைன்ஸ்’ 1977ல் தொடங்கப்பட்டது.
இந்த விமான நிறுவனத்தில் மூன்று போயிங் 747 விமானங்கள் உட்பட குறைந்தது 14 விமானங்கள் உள்ளன.
ஷேக் தமீமிடம் புகாட்டியில் இருந்து ஃபெராரி, லம்போர்கினி, ரோல்ஸ் ராய்ஸ் போன்ற நூற்றுக்கணக்கான சொகுசு கார்கள் உள்ளன.