Rashmika – ராஷ்மிகா மந்தனா காட்டில் அடைமழைதான்.. அவருக்கு கிடைத்திருக்கும் பெருமை தெரியுமா?

நேஷனல் க்ரஷ் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் ராஷ்மிகா மந்தனா. அவரது நடிப்பில் கடைசியாக சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் அனிமல் திரைப்படம் வெளியானது. படம் மோசமான விமர்சனத்தை பெற்றாலும் 900 கோடி ரூபாய் வசூலித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஹிந்தியில் இன்னொரு ஹிட்டை பார்சல் செய்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. இந்தச் சூழலில் அவருக்கு பெருமையான விஷயம் ஒன்று நடந்திருக்கிறது.

பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட ராஷ்மிகா மந்தனா 2016ஆம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவரது அழகையும், நடிப்பையும் பார்த்த தெலுங்கு திரையுலகம் ராஷ்மிகாவும் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றது. விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா நடித்த கீதா கோவிந்தம் மெகா ஹிட்டானது. மேலும் அந்தப் படத்திலிருந்து ராஷ்மிகாவுக்கு பலரும் ரசிகர்களாக மாறினர். அதனையடுத்து டியர் காம்ரேட் படம் சுமார் வரவேற்பை பெற்றாலும் ராஷ்மிகா மந்தனாவுக்கென்ற ரசிகர்கள் குறையவில்லை. தொடர்ந்து புஷ்பா உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்தினார்.

தமிழில் ராஷ்மிகா: தெலுங்கில் கொடிகட்டி பறக்கும் ராஷ்மிகா தமிழிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதன்படி, தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார். சுல்தான் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இதனையடுத்து விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்தார். விஜய்யுடன் நடித்திருப்பதால் தமிழில் மிகப்பெரிய ரவுண்டு வரலாம் என கணக்கு போட்டார் ராஷ்மிகா மந்தனா. ஆனால் இந்தப் படமும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

நேஷனல் க்ரஷ்: தமிழில் அவர் திணறினாலும் ஹிந்தியில் அவருக்கு பட வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. அந்தவகையில் குட் பை, மஜ்னு, அனிமல் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இப்படி பல மொழிகளில் நடிக்க ஆரம்பித்திருக்கும் ராஷ்மிகா மந்தனாவை ரசிகர்கள் நேஷனல் க்ரஷ் என்றும், எக்ஸ்பிரஷன் குயின் என்றும் அழைக்கிறார்கள். கடைசியாக அவர் அனிமல் படத்தில் நடித்தார். படம் மோசமான விமர்சனங்களை பெற்றது. ராஷ்மிகாவும் ஓவர் கவர்ச்சியாக நடித்திருந்தார்.

அடுத்தடுத்த வாய்ப்புகள்: ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பு அனிமல் படத்தில் பாராட்டையும் பெற்றது. மேலும் இந்தப் படத்தின் ஹிட்டால் அவர் சம்பளத்தை உயர்த்திவிட்டார் என்று கூறப்பட்டது. ஆனால் அதனை திட்டவட்டமாக மறுத்தார் ராஷ்மிகா. அனிமல் படத்தின் ஹிட்டால் ஹிந்தியில் அவருக்கு மேலும் சில பட வாய்ப்புகள் கிடைத்திருப்பதாகவும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

போர்ப்ஸ் பெருமை: இந்நிலையில் போர்ப்ஸ் இந்தியா நிறுவனம் ஆண்டுதோறும் பல துறைகளில் சிறந்து விளங்கியவர்களின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டுக்கான 30 வயதுக்குட்பட்ட 30 பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. அதில் ராஷ்மிகா மந்தனா இடம்பெற்றிருக்கிறார். அவருக்கு வயது 27. அவர் தவிர்த்து 28 வயதாகும் ராதிகா மதன், 25 வயதாகும் அதிதி சைகல் என்கிற பாடகி ஆகியோரும் இடம்பெற்றிருக்கின்றனர்.

குவியும் வாழ்த்து: சினிமாவில் அறிமுகமாகி சில வருடங்களிலேயே போர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் ராஷ்மிகா மந்தனாவுக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள். குறிப்பாக ராஷ்மிகா மந்தனாவின் காதலர் என தொடர்ந்து கூறப்படும் விஜய் தேவரகொண்டா இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “போர்ப்ஸ் பட்டியலில் ராஷ்மிகா மந்தனா இடம்பெற்றிருப்பது எனக்கு ரொம்பவே பெருமையாக இருக்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார். அவரது ட்வீட்டும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. இதற்கிடையே சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கான சர்பிரா படத்தில் ராதிகா மதன் ஹீரோயினாக நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *