பஞ்சாப் செல்கிறார் மம்தா பானர்ஜி: கெஜ்ரிவால், பகவத் மானை சந்திக்க திட்டம்..?
மம்தா பானர்ஜி வருகிற 21-ம் தேதி பஞ்சாப் மாநிலம் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாப் செல்லும் அவர் பொற்கோவிலில் சாமி தரிசனம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் டெல்லி மாநில முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் மாநில முதல்வர் பகவத் மான் ஆகியோரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி டெல்லி மற்றும் பஞ்சாபில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன. இதனால் பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மம்தா பானர்ஜி அங்கே செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், விவசாயிகள் போராட்டத்திற்கு மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.